லக.. லக… ஜோக்ஸ் (90)

கணவன் : என்னங்க.. நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே…!!

மனைவி : உனக்குத்தான் தெரியுமே… நான் கெட்ட விஷயத்தை மறக்க மாட்டேன்னு…!

******


பெண் 1 : நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !

பெண் 2 : இதிலே என்ன இருக்கு ?

பெண் 1 : எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு !

******

ஆசிரியர் : திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?

மாணவன் : எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு…!

******

டாக்டர் : தினமும் உடற்பயிற்சி செய்யுங்க. உடம்புக்கு ரொம்ப நல்லது.

நபர் : டாக்டர், நான் தினமும் கிரிக்கெட், டென்னிஸ் அப்புறம் ஃபுட்பால் விளையாடறேன்.

டாக்டர் : எவ்வளவு நேரம் விளையாடுவீங்க?

நபர் : மொபைலில் இருக்கும் பாட்டரி தீரும்வரை.

******

கணவன் : ஏய், நீ ரொம்ப அழகாயிருக்க?

மனைவி : சொன்னது நீங்களா இல்லை.. உங்களுக்குள்ள போயிருக்கிற சரக்கா?

கணவன் : சொன்னது நான்தான். ஆனா நான் சொன்னது நான் அடிச்ச சரக்குக்கிட்ட.

******

About The Author