லக… லக… ஜோக்ஸ் (92)

நண்பன்-1: அஜித்தோட மங்காத்தா பாத்தியா?

நண்பன்-2: அஜித்தோட பாக்கல. தனியாதான் பாத்தேன்.

*****

டாக்டர்: உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை… அதுக்குள்ள உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துட்டதே!

நோயாளி: உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க.

*****

டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறாங்க.

மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான்தானே? அவளுக்கு என்ன பயம்?

டாக்டர்: எங்க ஆபரேஷனை நல்லா பண்ணிடுவேனோன்னுதான்!

*****

கணவன்: நீ இவ்வளவு சந்தோஷமா இருக்குறத நான் இன்னிக்குத்தான் பாக்குற‌ேன்.

மனைவி: பின்ன இருக்காதா… நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!

*****

நண்பன்-1: எனக்கு ஒரு சந்தேகம்டா!

நண்பன்-2: என்னடா? கேளு!

நண்பன்-1: பைக் இருந்தா ஓட்ட தோணுது, டிவி இருந்தா பாக்கத் தோணுது…

நண்பன்-2: ஆமா… இதில என்ன இருக்கு?

நண்பன்-1: புக் இருந்தா மட்டும் ஏன் படிக்கத் தோண மாட்டேங்குது?

*****

About The Author