லக.. லக… ஜோக்ஸ் (95)

நபர் 1: வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?

நபர் 2 : சம்பளம் கைக்கு வந்ததும்…

நபர் 1 : சம்பளம் எப்போ கைக்கு வரும்?

நபர் 2 : நீங்க கேக்கறது நல்லாவா இருக்கு.. வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்?

*****

நோயாளி 1: அவர் பல் டாக்டர் இல்லை, போலி டாக்டர்னு எப்படி சொல்ற?

நோயாளி 2: பல் ஆடுதுன்னு அவர்கிட்ட சொன்னதுக்கு, பரதநாட்டியமா, குச்சுப்புடியான்னு கேக்கிறாரு.

*****


நபர் 1 : என் மனைவிக்கு என் மீது கொள்ளைப் பிரியம்

நபர் 2 : பரவாயில்லை.. என் மனைவிக்கு என்னைக் கொல்லத்தான் பிரியம்.

*****


நபர் 1 : ஏம்பா ஸ்கூட்டர தள்ளிக்கிட்டே வர்ற?

நபர் 2 : ஸ்கூட்டர் சாவிய காலைல வீட்டுலயே வச்சிட்டேன்.

நபர் 1 : அப்புறம் எப்டி காலைல ஆபீசுக்கு வந்த?

நபர் 2 : என்ன பண்ணித் தொலையறது தள்ளிக்கிட்டேதான் வந்தேன்.

*****

About The Author