லக.. லக… ஜோக்ஸ் (97)

டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கினால் போதும்.

மாணவன்: அது எப்பிடி டீச்சர் முடியும்? ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம்தானே ஸ்கூல் நடக்குது!

*****

கணவன் : கடைசி தடவையா கேட்கிறேன், கிளம்புறீயா.. இல்லையா?

மனைவி : நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ வந்துடுறேன்னு.. இருங்க..

*****

நோயாளி : உங்க டேபிள்ல இருந்த இந்த டானிக் ரொம்ப காரமா இருக்கு டாக்டர்…

டாக்டர் : யோவ்… அது நான் சாப்பிடறதுக்காக வச்சிருக்கற ஊறுகாய்..!

*****

கணவன் : ஏண்டி.. குழந்தை அழுதுட்டு இருக்குறதைக் கூட கண்டுக்காம டிவி சீரியல் பார்த்துட்டு இருக்க…

மனைவி: சும்மா இருங்க, குழந்தையும் சீரியல் பார்த்துட்டுதான் அழுதுட்டு இருக்கு.

*****

நிருபர் : நடிக்க வரலன்னா என்னவா ஆகிருப்பீங்க?

நடிகர்: டாக்டரா ஆகியிருப்பேன்.

நிருபர் : அதான் நடிக்கவே வரல இல்ல. டாக்டரா ஆகிருக்கலாம்ல?!

******

About The Author