லக… லக… ஜோக்ஸ் (99)

அப்பா: டேய்… நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழணும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கணும்!

மகன்: அப்போ, நீங்க அம்பானி ஆன பிறகு என்னைப் பெத்திருக்கணும்.

******

நோயாளி: ஆபரேஷன் பண்றதுக்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு?

டாக்டர்: அது, பாடியை வீட்டுக்கு எடுத்துட்டுப் போக ஆம்புலன்ஸ் வாடகை.

******

மனைவி: என்னங்க இது! எனக்கு வெறும் காட்டன் புடவை, வேலைக்காரிக்குப் பட்டுப்புடவையா?

கணவன்: அட, உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்மா! ஆனா, அந்தக் கழுதைக்குப் பட்டுப் புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு?

******

நபர்-1: அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது!

நபர்-2: ஐயே! ஏன்?

நபர்-1: ஜாம் ஜாம்னு நடத்தறாங்களே!

******

நண்பன்-1: ஒரு காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சுக் காக்காவை அடகு வச்சுது. ஏன் சொல்லு?

நண்பன்-2: ஏன்?

நண்பன்-1: காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே!

******

About The Author