வசந்தகாலம் (1)

பிரியமானவளின் அருகே
கலவிக்குப்பின் களைப்பாறுதல்

குயிலின் இசை
மலர்ந்த மலர்களுடன்
குளிர்ந்திருக்கும் கொடிப்பந்தல்

சந்திரனின்
வெண்ணிற தண் கதிர்கள்

கவிகளுடன் சம்பாஷணை

இவை நிறைந்த
வசந்தகால வண்ண இரவு
சில பாக்கியவான்களுக்கே
சுகமளிக்கும்.

****

About The Author