வசந்தகாலம் (2)

வசந்தகாலம்
வழிப்போக்கனுக்கு

பிரியமானவளின்
பிரிவுத்துயர் நெருப்பினை
கொழுந்துவிட்டெரியச் செய்யும் நெய்யாகும்.

மாமரத்தில்
புது மாந்தளிர்கள் தழைத்திருக்கும்

பெண்குயில்கள்
காதலுடன் குரல் எழுப்பும்

புதிதாய் மலர்ந்த
வெளுத்துச் சிவந்த மலர்களின் நறுமணத்தை
மலையிலிருந்து
அள்ளிவரும் தென்றல்

பாதையில் நடக்கையில் ஏற்படும்களைப்பை நீக்கி
புத்துணர்ச்சி தரும்.

(சமஸ்கிருத செய்யுட்களின் தமிழ் மொழியாக்கம்)

(பரத்ருஹரின் சுபாஷிதம் மின்னூலில் இருந்து)

About The Author