வாங்க சாப்பிடலாம்

பளபளக்கும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு, வேகமாய் வளர்ந்து வரும் வணிக வளாகம் அது.

மிகச் சிறந்த முறையில் அமைக்க விரும்பி, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மினி பாரத விலாஸ் போல, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி கலந்த கலவையான பேச்சுக் குரல்கள் கேட்டன.

சாப்பாடு வேளை வந்துவிட்டதால் எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிடத் தயாரானார்கள். டிபன் பாக்ஸைத் திறந்த குஜராத்தி, "ஹையோ! திரும்பவும் சப்பாத்தியா? இன்னொரு முறை லன்ஞ்க்கு சப்பாத்தி தந்தா, இந்த பில்டிங்ல இருந்து குதிச்சிருவேன்" என்றார்.

தன்னோட லன்ஞ் என்னவாக இருக்கும்னு யோசிச்சுக்கிட்டே திறந்த ரெட்டி, "சீனியர் ராமாராவோட பேரனுக்கு பேரன் வந்தாலும் ஆவக்காய் ஊறுகாயை மாத்த மாட்டேங்கறாளே! நாளைக்கும் இதையே வைச்சா, நானும் குதிச்சிடுவேன்" என்றார்.

நல்ல வாசனையா இருக்கேன்னு தன் லன்ஞ் பேக்கைப் பார்த்த சென்னைவாசி, "கோலங்கள் முடிந்தாலும் முடியும்; இந்த இட்லி, சாம்பார் மாறவே மாறாது. நானும் நாளைக்கு பார்க்கிறேன். திரும்ப இதையே வைச்சிருந்தால் நானும் உங்களோட குதிக்கிறேன்" என்றார்.

அடுத்த நாள், குஜராத்தி, ரெட்டி, சென்னைவாசி மூவரும் ஒவ்வொருத்தரோட லன்ஞ்சைப் பார்க்க, திரும்பவும் அதே சாம்பார், சப்பாத்தி, ஊறுகாய்.

மூவரும் முப்பதாவது மாடியில் இருந்து குதித்து இறந்து போனார்கள்.

கடைசிக் காரியத்துக்கு வந்திருந்தவர்கள் முதலில் சென்னைவாசியின் மனைவியிடம் போக, "அவர் இப்படிச் செய்வாருன்னு தெரிஞ்சிருந்தா, தோசை பண்ணியிருப்பேனே" என்றாள்.

மிஸஸ் ரெட்டியோ "ஆவக்காய்க்கு பதிலா அவரைக்காய் பொரியல் பண்ணித் தந்திருந்தால் அவரைக் காப்பாத்தியிருக்கலாமே" என்று வருத்தப்பட்டாள்.

இவர்களின் பதிலைக் கேட்ட குஜராத்தியின் மனைவி, முன்பை விட வேகமாய் அழ, காரணம் கேட்டனர் அருகிலிருந்தோர்.

"என்னவர் எப்போதும் அவருக்கு வேண்டியதை அவரேதான் சமைத்துக் கொள்வார்!" எனக் கூறி அழுகையைத் தொடர்ந்தாள்!

About The Author

1 Comment

  1. V.MUTHUKRISHNAN

    அட முட்டாள்களா சாப்பாட்டு பைய மாத்திக்கிட்டா ப்ரப்ளம் சால்வாகி இருக்கும்ல…..

Comments are closed.