வாசம்…!

தொலைந்த குழந்தையை
மீண்டும் பார்த்த ஒரு உன்னத
புளங்காகிதம் உனைப் பார்க்கையில்….

உன் இடுக்கு புன்னகையை
அடுக்கி அடுக்கி
ஒரு பூந்தோட்டம்
செய்து விட்டேன்…

தேனீக்கள் கூட்டம்
போல உன் இதழை
சுற்றி வர ஆசை…
வார்த்தை தேன்அள்ள…

அந்த காகிதங்கள்
காவியங்கள் ஆவது
உன்னால்…

எதிரே நீ வரும் போது
எனை அறியாமல்
என் கண்கள் உனைப் பார்க்கத்
துடித்து…
உன்னருகில் வரும் போது..
உன் கூந்தல் வாசத்தை
கண்மூடி சிலாகிக்கிறதே…!
ஆமாம் எனக்கு நெடு நாளாக ஒரு
சந்தேகம்…
மல்லிகை வாசமா?
உன் கூந்தல் வாசமா?

About The Author

2 Comments

  1. sridevi

    உன்னகலொடைய கவிதை படைப்பு நன்ட்ரக இருக்கிரது , மெல்லும் இவ்வாரக கவிதைகல் படைக்க யென்னொடைய நல்வழுதுக்கல்.
    Sridevi & Jairadha

  2. Manikandan

    கல்லூரி நாட்கலிலேயே நி ஒரு நல்ல கவி… உன்னுடைய படைப்புகலை இனைய தலத்தில் கன்டதில் மகிழ்ச்சி… மென்மேலும் படைப்புகலை எதிர்பார்க்கும் இனிய நன்பன்….

Comments are closed.