வானுயர் அடுக்கு மாடி

இரவு முழுமையாக
கவிழ்ந்ததும்
இருளின் திரை
தெளுவானை மறைக்க
நட்சத்திரங்களோ
தன்னிடத்தில்
உறைந்து
தமது
நிசப்த காவலை
துவங்கி
வரும்
உயரத்துக்கு

அதோ பாருங்கள்
சின்னச்சின்ன
வாகனங்கள்
முக்கியத்துவம்
இழுந்து
நிசப்தத்திரையில்
தீட்டப்பட்ட
வெற்றுக் கோடுகளாய்

நூற்றுக்கணக்கான
ஊசிமுனை விளக்குகள்
மினுக்காமல்
நிலைத்து
தனிமையில்
திடமற்ற
அருவ சட்டத்திலே போல்
அவையும்
காவல் காக்கும்
அவ்விரவில்
ஆனால்
காற்று
தழுவுவதில்லை அவற்றை
எமைத் தழுவுவதுபோல்

என்ன விநோதம்!
இல்லையா?
புரிதல் வேறுபடும் விதமும்
இடைவெளிகளில்

ஊடுருவும் சிந்தனைகளும்
தாங்க முடியாத மனம்
தத்தமது உயரங்களுக்கு
திரும்பும்
கீழிறங்கி
ஒதுக்கப்பட்ட
அவற்றின்
குகைளுக்கு

கற்கவேண்டியது:
காண்பது கூடாது
நீண்ட நேரம்
சிலவற்றை

(சொற்கள் தோற்கும்பொழுது – மின்னூலில் இருந்து)

About The Author