விதிவலிமை

அமிர்தம் நிறைந்துள்ளது
சந்திரனிடம்

மருந்துகள் அனைத்துக்கும்
தலைவன் அவன்

நூறு வைத்தியர்கள்
பின் தொடர்கின்றனர்

சிவனின் தலையில்
ஆபரணமாக இருக்கிறான்

ஆனாலும்
சந்திரனை
க்ஷயரோகம் விட்டபாடில்லை

விதியிடமிருந்து
தப்பிக்கும் சாமர்த்தியம்
எவருக்கும் இல்லை.

(சமஸ்கிருத செய்யுட்களின் தமிழ் மொழியாக்கம்)
(‘பரத்ருஹரின் சுபாஷிதம்’ மின்னூலில் இருந்து)

About The Author