வினைத்தொகை நான்கு குறிப்புகள்

1.ஆடி ஆடி ஆடி

ஆடுபாதமாகி

வினைத்தொகை இலக்கணம்

நாமாகி

விரசமாய் வாழும்

இழி வழக்கை

வாழ்வெனப் பகலும்

மாபெரும் பொய்யினை

எத்தனை யுகத்துக்கு

இழுத்துப் பிடிப்போம் இன்னும்?

2. நீயும் நானும்

இதுவரை சேர்த்த

வினைத்தொகை எல்லாம்

எப்போது தரையிறக்கி

லகுவாய் நடப்பது

தலை விழச்செய்த

பெருஞ்சுமை விட்டு?

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author