விமர்சனம்

அது எனக்கு
விவரம் புரியாத வயது.
எதிர்ப்படும் மனிதரை எல்லாம்
நேசிக்கிறேன் என்று
கை நீட்டினேன்.
பற்றிக் குலுக்கிய சிலர்
என் கையை
விமர்சித்தார்கள்.
விரல்கள் குட்டை..
சொரசொரப்பு அதிகம்..
பிடி இறுக்கம்.. என்று.
பற்றியதை உதறினேன்.
நீட்டிய கையில்
என் மனசிருந்ததை
எப்படிச் சொல்லுவேன்?

****

About The Author