விரல் தொட்ட வானம் (23)

நகரம்

திசை தப்பிய ஆடுகளைத்
தேடிக் கொண்டிருக்கிறான்
பாடுபட்டு வளர்த்தவன்.
கறிக்கடைகள் மிகுந்த
நகரத்து வீதிகள்!

முன் பின் அறிந்திராத
நிறுத்தம் கேட்டு
பயணச்சீட்டு வாங்கும்போதே
தேட
ஆரம்பித்து விடுகிறேன்
அதே நிறுத்தத்தில்
இறங்கவிருக்கும்
பரிச்சயமில்லாத முகங்களை.

செல்லம் கொடுத்து
‘செல்’லையும் கொடுத்து
வளர்த்த மகள்
படிதாண்டிப் போனாள்
தொடர்பு எல்லைக்கு
அப்பால்.

–தொட்டுத் தொடரும்…

About The Author