விரல் தொட்ட வானம் (24)

தரைபெருக்கியது காற்று
வாசல் தெளித்தது மழை
வீதியெங்கும் நீர்க்கோலம்!

******

மூத்தமகன் மேலத்தெருவில்
இளைய மகன் கீழத்தெருவில்
பெற்றோர்கள் நடுத்தெருவில்!

******

ஏற்றம் இறைத்து
வளர்த்த பருத்தி
வெடித்த நாளில் கனமழை!

******

முள் நிறைந்த காடுகளில்
பறக்கின்றன பலூன்கள்
நொடிகளை எண்ணிக்கொண்டே!

–தொட்டுத் தொடரும்...

About The Author