விரல் தொட்ட வானம் (33)

மரம்

நேராய் வளர வேண்டுமென
கிளைகளைக் கழிக்கிறது
ஆணிவேரில்
கலந்தது தெரியாமல்.

மறுப்பு

தட்டினால் திறப்பதற்கும்
கேட்டால் கொடுப்பதற்கும்
ஒன்றுமில்லையென
சென்று கொண்டிருக்கிறார்கள்
முதுமை என்னிடம்
வந்து கொண்டிருக்கிறது.

தினவு

சிவப்பு விளக்கில்
கிடக்கின்றன நாட்கள்
இன்பத்தையும்
துன்பத்தையும்
எச்சமிடுகின்றன
காமக் கழுகுகள்
துடைக்கவே முடியாத
வேதனையில் சீறுகிறேன்
பயணிக்கும் பேருந்தில்
புட்டம் உரசும் மாடுகளிடம்
பத்தினி வேடம் தரித்து!

–தொட்டுத் தொடரும்…

About The Author