விரல் தொட்ட வானம் (39)

குடை

வெயிலோடும்
மழையோடும்
போராடுகின்றன மக்களுக்காக
நாட்டில்
பல குடைகள்.
பாதுகாக்கப்பட வேண்டிய
அவற்றை
கையில் மட்டுமே
வைத்திருக்கிறோம்
தேவை இல்லை என்றால்
தூக்கி எறிவதற்கு வசதியாய்

வேற்றுமை

எந்தப் பூட்டையும்
திறக்கின்ற சாவி
கேட்டால் மட்டுமல்ல
கேட்காமலும் தருகின்ற
மனதும்
உன்னிடம் இருப்பது தெரிந்தும்
வேறு எங்கெங்கோ
தேடி அலைகிறார்கள்
அவர்கள்
உன் பிறப்பு கருதி.

பதில்கள்

அன்புள்ள அக்காவிற்கு
அன்பு தங்கைக்கு
இனிய சகோதரிக்கு
உடன்பிறவா சகோதரிக்கு
ஆண் நண்பர்கள்
நிழற்படம் கேட்க
அனுப்பிய பின்
இப்படியாகத்தான் இருந்தன.

–தொட்டுத் தொடரும்…

About The Author