வெஜிடபிள் பக்கோடா

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 200 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
சோள மாவு – 50 கிராம்
வெண்ணெய் – 100 கிராம்
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு
உப்பு – சுவைக்கு
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – ஒரு பெரிய துண்டு
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 2(பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி – 1/2 கப்
கேரட் துருவியது – 1/2 கப்

செய்முறை:

ஒரு அகன்ற தட்டில் முதலில் வெண்ணெய், உப்பு, அரை கப் தண்ணீரும் சேர்த்து நன்றாக அடிக்கவும். பிறகு மூன்று மாவுகளையும் போட்டு நன்கு கலக்கவும். மணமாக இருக்கும். பிறகு நறுக்கிய வெங்காயம், துருவிய காரட் மற்றும் பச்சை பட்டாணியைச் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொண்டு இரு பகுதிகளாகப் பிரிக்கவும். முதல் பகுதி மாவில் சிறிது தண்ணீர் தெளித்து லேசாக பிசைந்து காய்ந்த எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொறிக்கவும். பிறகு மீதம் இருக்கும் மாவிலும் இதே போல் தயாரித்துக் கொள்ளவும். நல்ல மொறு மொறுப்பான சத்து மிகுந்த சுவையான பக்கோடாவை நீங்களும் முயன்று பாருங்கள்!

About The Author