வெஜிடபிள் பட்டாணி மசாலா

தேவையான பொருட்கள்:

பட்டாணி – 1 கோப்பை
உருளைக்கிழங்கு – 2
கேரட் – 1
குடைமிளகாய் – 2
காலிபிளவர் (நறுக்கியது) – ½ கோப்பை
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
சீரகத்தூள் – ½ மேசைக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
கொத்துமல்லி, உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு – 1 மேசைக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை – 2 துண்டு

செய்முறை:

முதலில், பட்டாணியைத் தனியாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகளையும் பொடியாக நறுக்கி, சிறிது உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் வெண்ணெயை விட்டு உருக்கி, எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி பட்டை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துச் சிறிது வதக்கி, கூடவே வெங்காயமும் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி, குடைமிளகாய், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு பட்டாணி,காய்கறிகளையும் அதில் கலந்து, தேவையான அளவு தண்ணீர், உப்புச் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, எலுமிச்சம்பழச்சாறு ஊற்றி, கொத்துமல்லித்தழை தூவி இறக்குங்கள்.

சுவையான வெஜிடபிள் பட்டாணி மசாலா தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author