வெல்ல அப்பம்

தேவையான பொருட்கள்:-

அரிசி 1 கப்
தேங்காய்த் துருவல் 1/4 கப்
வாழைப்பழம் 1
வெல்லத்தூள் 1/4 கப்
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
ஆப்ப சோடா 1 சிட்டிகை

செய்முறை:-

அரிசியை மூன்று மணிநேரம் ஊற வைக்கவும்.பின்னர் மிக்ஸியில் அரிசியுடன் தேங்காய்த் துருவல், வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். அரைக்கும் போது தண்ணீர் அதிகம் ஊற்றாமல் தெளித்து அரைக்கவும். நன்கு மசிந்து மாவு நைசான பின்னர் வெல்லப் பொடியையும் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த அரிசி மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் அதிகமாகி விட்டால், வெல்லத்தூளை மாவுடன் சேர்த்து அரைக்காமல் மாவில் போட்டு நன்றாக கரண்டியால் கலக்கவும். அந்த மாவில் ஏலப்பொடியும், ஆப்ப சோடாவும் கலந்து பத்து நிமிடங்கள் ஊற விடவும்,

வாணலியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்த பின் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். சிறிய குழிக் கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு முறைக்கு ஒன்றுதான் ஊற்ற வேண்டும். இரண்டு பக்கங்களும் நன்றாக சிவந்ததும் எண்ணெயை வடித்து அப்பத்தை எடுக்கவும்.

About The Author