ஹைக்கூ கவிதைகள்

1. ஏழை இந்தியன்

ஆச்சரியக்குறியாய் வர்த்தகம்
தொடர்புள்ளியாய் அன்னிய நிறுவன வருகை
கேள்விக் குறியாய் ஏழை இந்தியன்

2. சகுனம்

குறுக்கே பூனை
எதிரே விதவைச் சகோதரி
வீட்டிற்குள் சகுனம் தேவையில்லை

3. முதியோர்

முதியோர் தினம்
மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்
முதியோர் இல்லத்தில்

4. வியாபாரம்

வியாபாரத்தில் இழுபறி
முடங்கியது பொருட்கள்
முதிர்கன்னியராய்

5. நெருக்கம்

ஏமாறுபவர்கள் உள்ளவரை
ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்
நெருங்குகிறது தேர்தல்

****

About The Author

2 Comments

Comments are closed.