இராசிபலன்கள் (02-02-2009 முதல் 08-02-2009 வரை)

1. மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில்களைச் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.அடுத்தவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதி இழக்காதீர்கள். நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரலாம். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வருவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கு இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். காதல் விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கைவந்து சேரும். ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்டம் மூலமாகப் பொருள் இழப்பு ஏற்படலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்,- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

2. ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இது நாள் வரை இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பீர்கள். உடல் நிலையில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்  என்பதால் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. வீடுகளை இட மாற்றம் செய்யக் கூடிய காலமாகும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளுடன் மனக் கசப்பு உண்டாகி, பணி இட மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வெளி நாடு சம்பந்தமான விஷயங்களில் மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். யாத்திரையில் கவனம் தேவை. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

3. மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லதாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும்,  பரிசு மற்றும் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். புதிய வீடு வாகனங்களை வாங்குவது சம்பந்தமாகிய எண்ணங்களையும் முயற்சிகளையும் சற்றுத் தள்ளிப் போடவும். மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,அசைவ உணவுக் கூடங்கள் நடத்துபவர்கள், கம்ப்யூட்டர் மற்றும் இன்ஜினியரிங் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பயன் அடைவார்கள். காதல் விஷயங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய கடன்களை வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமற் போகலாம். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகப் பாடு படுவதில் மன நிறைவை அடைவீர்கள். யாத்திரையில் புதிய செல்வந்தர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். உடம்பில் முதுகு மற்றும் வயிறு போன்ற இடங்களில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

4. கடகம்:-

கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட நாட்களாகத் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும். வீட்டில் நெருப்பு மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் மிகு கவனமுடன் இருத்தல் நல்லதாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்து வந்த பணம் மற்றும் பொருள் உதவிகள் கிடைக்கும். நீண்ட காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி திரும்புவம் ஒன்று சேரக் கூடிய காலமாகும். அண்டை அயலாருடன் மிகுந்த கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் மூலம் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக உதவி செய்வதில் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களுக்காக அநாவசியமாகப் பொருட் செலவுகளைச் செய்வீர்கள். தங்கம் வெள்ளி போன்ற நகை வியபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருட்களை விற்பனை செய்வோர்கள், அநாதை ஆசிரமம் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லதாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

5. சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளின் மூலமாக வெகு நாட்களாக எதிர் பார்த்து வந்த கடன் தொகைகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்லதொரு முடிவு கிடைக்கும். தாயின் உடல் நிலை பாதிப்புகளால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். வீடுகளில் கவனமுடன் இருந்தால் தீட்டுப் போவதைத் தவிர்க்கலாம். வேலை ஆட்களால் பொருள் வரவும் மன நிம்மதியும் உண்டாகும். யாத்திரையில் எச்சரிக்கையுடன் பயணம் செய்து வருவது நல்லது. நாட்பட்ட கொடுக்க வேண்டிய பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்க எடுத்துக் கொண்ட முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் காரணமற்ற முன் கோபத்தால் வீண் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. கட்டிட சம்பந்தமான செங்கல், மணல், சிமிண்ட், கல் போன்ற பொருட்களின் வியாபாரிகள், சினிமா, நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இவற்றில் பணி புரிவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் காது மற்றும் கண்களில் கவனம் தேவை. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை: வடமேற்கு
பரிகாரம்:- ஞயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

6. கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, இந்தவாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். ஒரு சிலருக்கு வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாலாம். சம்பந்தம் இல்லாத புதிய மனிதர்களின் தொடர்புகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். உடம்பில் வலி வாயுத் தொல்லைகள் போன்ற சிறிய உபாதைகள் வந்து போகலாம். மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர வாய்ப்பு உள்ளது. விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான பலன்கள் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து நல்ல தகவல்களை எதர்பார்க்கலாம். பொதுத் தொண்டுகளைச் செய்பவர்கள் வீண் மனக் குழப்பங்களைத் தவிர்க்கவும். ஆடு, மாடு போன்ற வாகனத் தொழிற் செய்பவர்கள் மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள் மற்றும் இவற்றை ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

7. துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். துலை தூரப் பயணங்கள் மூலம் எதிர்பார்த்திருந்த ஆதாயங்களை அடைவீர்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். தண்ணீர், திரவ சம்பந்தமான பொருட்கள், கூல்டிரிங்ஸ், போன்ற வியாபாரம் செய்பவர்கள், கணிதம், எழுத்து,அச்சுத் தொழில் போன்ற துறை சார்ந்தவர்கள், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்பவர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். கோர்ட் வழக்கு விஷயங்களில் சம்பந்தமற்ற நபர்களின் உதவியால் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.அண்டை அயலார்களுடன் சுமூகமான உறவுகள் உண்டாகும்.வரவேண்டிய குடும்பச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் உதவியால் கை வந்து சேரும் காலமாகும். வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பி வர வாய்ப்பு உள்ளது. பொது நலத் தொண்டு நிறுவனம் நடத்துபவர்கள், ஆசிரமவாசிகள் ஆகியோர்கள் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க் கிழமையில் துர;க்கை அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

8. விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நோய்களுக்குப் புதிய முறை மருத்துவத்தினை நாடுவதன் மூலம் நன்மை அடைவீர்கள். உத்தியோகத் துறையினர்களுக்கு எதிர்பாராத பணி இட மாற்றம் ஏற்படலாம். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பெறுவீர்கள். கட்டி முடிக்கப் படாத பழமையான வீடுகள் மற்றும் ஆலயங்களை புதுப்பித்துக் கட்டுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஹோட்டல் தொழில்கள், உணவுப் பொருள் விற்பனை செய்வோர்கள், வழக்கறிஞர்கள், ஆலயப் பணி செய்வோர்கள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தீர்த்த யாத்திரைகள சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமாகிய வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். காதல் விஷயங்களில் மற்றவர்களின் உதவிகளை நினைத்து ஏமாற்றம் அடைவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

9. தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கி மன நிம்மதி இழக்க நேரிடலாம். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. பொதுச் சேவைகளைச் செய்வதன் மூலம் மற்றவர்களின் பாராட்டுக்களையும் மன நிம்மதியும் அடைவீர்கள். தென்மேற்குத் திசையில் இருந்து எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். புண விஷயமாகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கடும் முயற்சிகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறை சார்ந்தவர்கள், கலைப் பொருட்களின் வியாபாரிகள், அச்சுத் தொழிற் செய்வோர்கள், வங்கிப் பணியாளர்கள், திருமணத் தகவல் மையங்கள் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். புதிய வீடு மற்றும் வாங்கப் போட்டிருந்த திட்டங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தாய் வழிச் சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும்.
பிள்ளைகளால் பொருட் செலவுகள் ஏற்பட்ட போதிலும் அவர்களால் நன் மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக் கிழமையில் சனீஸ்வர ஆலய வழிபாடு செய்து வரவும்.

10. மகரம்:-

மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளுக்குள் காரணமற்ற சச்சரவுகள் வந்து போகும். கடன் கொடுத்து இருந்த வர வேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் தொடர்புகளால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தேவையற்ற கற்பனைகளைக் குறைத்துக் காரியத்தில் கண்ணாய் இருங்கள. ஆலயத் திருப்பணி மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான பொதுக் காரியங்களில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. சுபகாரிய நிகழச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். நெருப்பு, போலீஸ், ராணுவம், போன்ற துறை சார்ந்த வியாபாரிகள், மின்சாரப் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர்கள், கல்வித்துறைப் பேராசிரியர;கள் ஆகியோர;கள் நல்ல பலனை அடைவார்கள். உத்தியோகம் கிடைப்பதற்கான முயற்சிகளில் அரசியல்வாதிகளின் உதவிகளை நாடுவதன் மூலம் ஒரு சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். பிரிந்து போன உறவுகளைத் திரும்பவும் சந்தித்து மன நிறைவை அடைவீர்கள். கண்களில் கவனம் தேவை. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சழகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கள் கிழமையில் கணபதி ஆலய வழிபாடு செய்து வரவும்.

11. கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் மிகுந்த அக்கரையுடன் ஈடு படுவீர்கள். புதிய கடன் கொடுத்தலை தவிர்த்தல் நல்லது. குடும்பத்தில் இது வரையில் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். வாகனங்களில் யாத்திரை செல்லும் போது மிகுந்த கவனமுடன் சென்று வரவும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வெளியூர்ப்; பயணம் சென்று வர எண்ணுவீர்கள். வேற்று மதத்தவர்களால் வெளி நாடு சென்று வருவது போன்ற முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பொது நலத் தொண்டு நிறுவனம் நடத்துபவர்கள், கம்ப்யூட்டர் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். புதிய நண்பரகளால் வீண் பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனம் தேவை. குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்து இருந்த தகவல்கள் வந்து சேரும். விவசாயம் சுமாராகப் பலிதமாகும். உடம்பில் நரம்பு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரகமாகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

12. மீனம்:-

மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். அண்டை அயலார்களிடம் மிக கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. குடும்பத்தில் இது வரையில் இருந்து வந்த பணப் பிரச்சனைகள் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். பங்குத் தொழில் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் முயற்சியால் கை வந்து சேரும். ஒரு சிலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். திருட்டுப்போன பொருட்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். சேய் தொழிலில் எதிர்பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். சூதாட்டம் மூலம் பணம், பொருள் இழக்க நேரிடும். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் உகந்ததாகும். ஸ்டேஷனரி சாமான்கள், பலசரக்கு, எண்ணை, விதை வித்துக்கள், தானியம் போன்ற வியாபாரிகள், பெட்ரோல், டீசல் வியாபாரம் செய்பவர்கள், வழக்கறிஞர்கள், ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.”

About The Author