இராசிபலன்கள் (10-6-2013 முதல் 16-6-2013 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயத்தின் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவதைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பொதுநலச் சேவை செய்பவர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. பொதுத் தொண்டு நிறுவனத்தவர்கள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், நகை வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், இனிப்புப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், நறுமணப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். படித்த, வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். சூதாட்டத்தால் ஏமாற வேண்டாம்! வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். கணவன் – மனைவிக்குள் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். பிரிந்து போன உறவுகளுடன் திரும்பவும் தொடர்புகள் ஏற்படக் கூடிய காலமாகும். சகோதர, சகோதரிகளின் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இரும்பு, இயந்திரம், எண்ணெய், பலசரக்கு, மாமிசப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், ஆலை அதிபர்கள், பொறியியல்துறையைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். எடுத்த காரியத்தைத் துணிச்சலுடன் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வாய்ப்பு உள்ள காலமாகும். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். புதிய கடன் வாங்கினால் திரும்பிச் செலுத்த இயலாமல் போகுமாகையால் கடன் வாங்குவதைத் தவிருங்கள். பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது!

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர் வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

மிதுனம் :-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் உண்டாகலாம். வாயுத் தொல்லை, வயிற்று உபாதைகள் போன்றவை வந்து போகலாம். நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். ஒரு சிலருக்குப் பணியிடத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகிப் பணியிடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட நோய்கள் தீரப் புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது. காரணமற்ற மனக்குழப்பங்கள் வர இருப்பதால் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது நல்லது! பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லதாகும்! புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைப்பதில் வேற்று மதத்தவர்களால் தாமதம் ஏற்படலாம். பொதுத் தொண்டு செய்பவர்கள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், திரைப்படம், நாடகம் போன்ற கலைத்துறைகளைச் சார்ந்தவர்கள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள் – மாணவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கட்டுமானப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் மிகவும் நற்பலன் அடைவர்.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

கடகம் :-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். சகோதர, சகோதரிகளின் தடைபட்ட திருமணக் காரியங்கள் மற்றவர்களின் உதவியால் நிறைவேறும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார், உறவினர்களின் திடீர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். ஒரு சிலருக்கு வீடு, பணியிடம் ஆகியவற்றில் இடமாற்றம் ஏற்படும். பொதுநலத் தொண்டுகளில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டுப் பெயரும் புகழும் அடைய வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், எரிபொருள் வியாபாரிகள், பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், பலசரக்கு வியாபாரிகள் ஆகியோர் லாபம் அடைவர். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தினர்களிடமிருந்து எதிர்பார்த்த செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வரக்கூடிய காலமாகும். அண்டை, அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் சற்றுக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு, பணியிட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுத்தொண்டு புரிபவர்கள், ஆதரவற்றோர் இல்லங்களை நடத்துபவர்கள் ஆகியோருக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசும் பாராட்டுகளும் பெறுவதோடு அரசு ஆதரவையும் அடைவார்கள். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட காலமாகப் பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் உண்டாகும். நூல், ஆடை, மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள் நற்பலன் அடைவர். மனைவி திடீரென நோய்வாய்ப்பட இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்காரமும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலமாகவோ செய்யும் தொழிலிலோ திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயமும் நற்செய்திகளும் வந்து சேரும். கண், காது, தலை போன்ற பாகங்களில் சிற்சில உபாதைகள் வருவதன் மூலம் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். குடும்பச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் திரும்பக் கிடைக்கும். பயணங்களின்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. முன் கோபத்தைத் தவிருங்கள்! புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் உண்டாகும். அசைவப் பொருள் விற்பனையாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் – ஆசிரியர்கள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள், எண்ணெய் வகைகளை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், பழைய இரும்பு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். கடன் கொடுத்து ஏமாற வேண்டாம்!

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

துலாம் :-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். புதிய, பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான நற்பலனே கிடைக்கும். கடன் கொடுத்து ஏமாற வேண்டாம்! ஆடம்பரச் செலவுகள் செய்ய எண்ணிப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத்தொழில் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். பழைய இரும்பு, இயந்திரம், வேதியியல் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், அணுஆராய்ச்சித்துறையில் பணியாற்றுபவர்கள், அரசியல் அறிஞர்கள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், கணினித்துறையினர், நாடகத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புள்ள காலமாகும். வாயு, வாதம் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது. பழுதுபட்ட பழைய வீடு, வாகனங்களைப் பழுது பார்க்கும் வகையில் பொருட்செலவுகள் வந்து சேரும்.

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் காளி மற்றும் பிதுர் வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். தரகு, கமிஷன் போன்ற தொழில் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதாகும்! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளிலும், பங்குச்சந்தையாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். வெகு காலமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர். நீண்ட நாட்களாக வராத கடன், கொடுத்து இருந்த பணம், பொருட்கள் ஆகியவை திரும்பக் கை வந்து சேரும். பணியாட்களால் பிரச்சினைகளும் பொருள் இழப்பும் வர இருப்பதால் கவனம் தேவை! மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டுகளும் பெறுவதோடு அரசு உதவித்தொகைகளை அடையவும் வாய்ப்பு உள்ளது. அரசுத் துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள், நூல், ஆடை போன்ற பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், மருந்துப் பொருள் வியாபாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் – ஆசிரியர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

தனுசு :-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதால் புதிய தொடர்புகளைத் தவிர்த்தல் நல்லது! புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். நண்பர்கள் வீட்டுச் சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் உறவினர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். காய்கறி, இலை, பூ, பழம் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள், தின்பண்ட வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், அச்சுத்தொழில் செய்வோர், அஞ்சல்துறையினர் ஆகியோர் நற்பலன் அடைவர். பயணங்களில் எச்சரிக்கை தேவை! வராத கடன், கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும். விட்டுப் போன பழைய உறவுகளிடம் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை உருவாகும். அலுவலகப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளிடம் மனக் கசப்பு ஏற்பட்டுப் பணியிட மாற்றம் ஏற்பட இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது!

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்காக எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கைவந்து சேரும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் தொகைகள் நண்பர்களின் உதவியால் கிடைக்கும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் திருப்தி அடைவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான பலன்கள் கிடைக்கும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! முதியோர் இல்லம் நடத்துபவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு வியாபாரிகள், கடல்துறை சார்ந்த அறிஞர்கள், தண்ணீர், குளிர்பான வியாபாரிகள், பூஜைப்பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். உற்றார், உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர்பாராத பொருட்செலவுகளும் நிம்மதிக் குறைவுகளும் ஏற்படலாம். வட திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்ய எண்ணுவீர்கள். பயணங்களின்போது மிகவும் கவனமாகச் சென்று வருவது நல்லது! விபரீதமான எண்ணங்களைக் கை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருங்கள்! பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது! திருமணம் சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்றுத் தள்ளிப் போடுவது சிறந்ததாகும்! பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வராத பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்குப் புதிய படிப்புகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும்.
காய்ச்சல், உடற்சூடு போன்ற உபாதைகள் வந்து போகும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். மின்சாரம், இராணுவம், எரிபொருட்கள் தொடர்பான தொழிலில் இருப்பவர்கள், காவல்துறையினர், உணவுப்பொருள் வியாபாரிகள், தரகு, கமிஷன் போன்ற தொழில்கள் செய்பவர்கள், நிலபுலன்கள் விற்பனை செய்வோர் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். புதிய வீடு, நில புலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். தடைபட்டுப் போன சகோதர, சகோதரிகளின் சுப காரியங்கள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்து சேரும்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

மீனம் :-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வேலையாட்களிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! பயணங்களின்போது சம்பந்தம் இல்லாத நபர்களுடனான தொடர்புகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். பூர்விகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். நீண்டகாலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணக் காரியங்கள் நிறைவேறும். கட்டுமானப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், ஆடம்பர, அலங்காரப் பொருள் வியாபாரிகள், அழகுக்கூடங்களை நடத்துபவர்கள், நடிகர்கள், திருநீறு, குங்குமம், நறுமணப் பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த, சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற மனச் சஞ்சலங்களைத் தவிருங்கள். தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் வரக் கூடுமாகையால் கவனமாக இருங்கள்! குலதெய்வ வழிபாடுகளைச் செய்து வருவது நல்லது! உற்றார், உறவினர்களிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்!

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடும் அன்னதானமும் செய்து வாருங்கள்!

–மீண்டும் அடுத்த வாரம்…

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, Tamil Nadu, India.
Phone: 04633-243029.
Mobile: 98425-10578, 98425-29691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com

About The Author