இராசிபலன்கள் (12-1-2009 முதல் 18-1-2009 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சந்திரன் நன்னை தரும் கிரகமாகும். திருட்டுப்போன பொருட்கள் பிறர் உதவியால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் நிலையில் கழுத்து, மார்பு போன்ற இடங்களில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம். பிள்ளை இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படக் கூடிய காலமாகும். மாணவர்கள் கல்வியில் சிறு தடைகள் வந்த போதிலும் நல்ல மதிப்பெண்களையும் பரிசு மற்றும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, நிலம் போன்றவைகளை வாங்க முயற்சிப்பீர்கள். காரணமற்ற மனக் குழப்பங்களைத் தவிர்த்தல் நல்லதாகும். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். தண்ணீர், கூல்டிரிங்ஸ், ஐஸ் போன்ற வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆலயத்துறை சார்ந்தவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- வெள்ளிக் கிழமையில் அம்மன் ஆலய வழிபுhடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அந்நிய நாடுகள் சென்று வருவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுப் பின் சென்று வருவீர்கள். உத்தியோகத் துறையினர்கள் மிகுந்த கவனமுடன் பணியாற்றுதல் சிறந்ததாகும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். தாயின் உடல் நிலையில் இருந்து வந்துள்ள பிணிகள் குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். இரும்பு, இயந்திரம் இரசாயனம், மருந்துப் பொருட்கள் விற்பனை செய்வோர்கள் மற்றும் மருத்துவத் துறை சார்ந்ந பேராசியர்கள், மாணவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வேலைக்கார ஆட்களால் எதிர்பாராத சில ஆதாயங்களும் பண வரவும் உண்டாகும். செய்தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் மாறிப் பணப் புழக்கம் நன்றாகக் காணப்படும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கைவந்து சேரும். குடும்பத்தில் காரணமற்ற விஷயங்களுக்காக வீண் மன சஞ்சலங்கள் வந்து போகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் சில சிக்கல்கள் வந்து போகும். ஆலயத் திருப்பணிகளுக்கான பொது விஷயங்களில் தலையிட்டு நற்பெயர் எடுப்பீர்கள். நீண்ட தூரத் தீர்த்த யாத்திரை சென்று வருவதற்கான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த நாட்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். வங்கிகளின் உதவியால் புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. யாத்திரையில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு வீண் மன சஞ்சலம் அடையாதீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்கிளில் எதிர்பார்த்து இருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும் காலமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவியோடு சென்று வர வாய்ப்பு உள்ள காலமாகும். மாணவர்களுக்குக் கல்வியில் சிற்சில தடைகள் வந்து விலகிப் போகும். வேற்று மதத்தவர்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். திருட்டுப் போன பொருட்கள் சம்பந்தமாக புதிய தகவல்கள் கிடைத்து அதன் மூலம் திரும்பிப் பொருட்கள் கை வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிற் செய்வோர்கள், இரசாயனம் மற்றும் திரவ சம்பந்தமான பொருள் வியாபாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவார்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காணாமற் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வரவால் சில ஆதாயங்களையும் மனச் சந்தோஷமும் அடைவீர்கள். ரேஸ் லாட்டரி போன்ற விஷயங்களில் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம். பெண்களால் எதிர் பார்த்து இருந்த ஆதாயம் கிடைப்பதில் சற்றுக் காலதாமதம் ஆகலாம். உத்தியோக துறையினருக்கு மேலதிகாரிகளின் பகையும் மற்றும் பணி இட மாற்றமும் ஏற்பட இருப்பதால் மிகுந்த கவனமுடன் பணி ஆற்றுதல் நல்லது. கம்ப்யூட்டர், மின் சாதனப் பொருட்களின் வியாபாரிகள் மற்றும் இவைகளில் பணி புரிவோர்கள், கமிஷன் தரகு, ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு மன சஞ்சலம் அடைய வேண்டாம்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்படும். தொழிற்சாலைகள் மற்றும் வீடு வாகனங்களை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளது. பழைய வழக்குகள் மீண்டும் தொல்லை தருவதன் மூலம் மன சஞ்சலங்கள் வந்து விலகும். கலைத்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், ஆலயப் பணி புரிவோர்கள், இவற்றில் பணி ஆற்றுவோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாலாம். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட தீராத நோய்களுக்குத் தீர்வுகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான நீண்ட நாள் முயற்சிகளில் நல்ல புலன்களை எதிர் பார்க்கலாம்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த திடடங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து நிம்மதி அடைவீர்கள். மருத்துவர்கள், மருந்துப் பொருள் வியாபாரிகள், திரவ சம்பந்தமான பொருள் வியாபாரிகள், உப்பு, உரம் விற்பனையாளர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரக் கூடிய காலமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனமுடன் இருக்கவும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக் கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுற்று சுமாராகவே காணப் படும். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களாகிய திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வர வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவியால் திருட்டுப் போன பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒன்று சேருவார்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் காரணமற்ற குழப்பங்களும் மற்றும் சில மன சஞ்சலங்களும் வந்து விலகும். நெருப்பு, போலீஸ், ராணுவம், போன்ற துறை சார்ந்தவர்கள் மற்றும் ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், சமையற் கலைஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். காதல் விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக் கிழமையில் அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தந்தை வழியிலான வரவேண்டிய சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கும். தீர்த்த யாத்த்திரை சென்ற வருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். காய்கறி, இலை, கீரை போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள், பலசரக்கு, எண்ணை மற்றும் மீன், முட்டை, மாமிசம் போன்ற வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். பிள்ளைகளால் இருந்த வந்த தொல்லைகள் குறைந்து மன நிம்மதியும் ஆதாயமும் அடைவீர்கள். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு அவமானப்பட நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். தந்தை மகன் உறவில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் குறைந்து சுமூகமான சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, செவ்வாய் நனமை தரும் கிரகமாகும். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்குப் புதிய இட மாற்றம் ஏற்படலாம். யாத்திரைகளில் மிகுந்த கவனமுடன் யாத்திரை செய்து வருதல் நல்லது. குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கும். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உண்டாகுவதோடு ஒரு சிலருக்குப் பதவி உயர்வும் ஏற்படக் கூடிய காலமாகும். சகோதர சகோதரிகளின் திருமண விஷயங்கிளில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. நீண்ட தூரப் பயணங்களில் எதிர்பார்த்த காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் மிகுந்த கவனமுடன் படித்தல் நல்லது. குடும்பச் சொத்துக்கள் திரும்பக் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- வெள்ளிக் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரக் கூடிய காலமாகும். தீராத பழமையான நோய்களுக்குத் தீர்வுகள் கிடைக்கும். அண்டை அயலாருடன் கவனமானப் பேசிப் பழகவும். குல தெய்வ வழிபாடு செய்து வர மிகுந்த முயற்சியின் பேரில் சென்று வருவீர்கள். கண் காதுகளில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமாகிய நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும். வீடுகளைப் புதுப்பித்துக் கட்டத் திட்டம் பொடுவீர்கள். பொதுத் தொண்டுகள் மற்றும் அநாதைக் குழந்தைகளுக்கான உதவிகளைச் செய்து மன நிம்மதியும் பிறரது பாராட்டுக்களையும் பெறுவீர்கள். நீண்ட காலமாகக் கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் திரும்பக் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்: 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கள் கிழமையில் கணபதி ஆலய வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சிறிது கால தாமதம் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்து இருந்து வந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். உடல் நிலையில் வாயு மற்றும் வாதம் போன்ற சில உபாதைகள் வந்து போகும். யாத்திரையின் போது சில புதிய மனிதர்களின் தொடரபு ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைய வாய்ப்பு உள்ளது. கணிதம், எழுத்து, கதை, சினிமா போன்ற துறை சார்ந்தவர்களும், நெருப்பு சம்பந்தமாகிய தொழிற் செய்வோர்களும், வழக்கறிஞர்களும் ஆதாயம் அடைவார்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். பிள்ளைகளால் மன நிம்மதியும் கௌரவமும் அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். பொதுத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொண்டு செய்து பெயர் புகழ் பெறுவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன் கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.

About The Author