இராசிபலன்கள் (12-3-2012 முதல் 18-3-2012 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காலந் தாழ்ந்த உணவருந்துதலும், நித்திரை பங்கமும் ஏற்படும். மூத்த சகோதரருக்கு மருத்துவச் செலவகள் ஏற்படும். உடம்பில் வயிறு மற்றும் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. விஞ்ஞானத்துறை சார்ந்தவர்களின் புதிய ஆராய்ச்சிகளில் நல்ல வெற்றி அடைவீர்கள். வெகு காலமாக சரி செய்யப்படாத ஆலயப் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. இணைய தளங்கள், தொலைக் காட்சி நிறுவனத்தினர்கள், கம்யூட்டர் சாதன வியாபாரிகள், நெருப்பு சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், காவல் துறை மற்றும் இராணுவம் சார்ந்தவர்கள், தீயணைப்புத் துறைகளில் பணி செய்வோர்கள்,
மசால் சம்பந்தமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல தகவல்கள் வந்து சேரும். திருமண சம்பந்தமான விஷயங்களில் நிதானமுடன் செயல்படவும். யாத்திரைகளை விலக்கவும். நண்பர்களால் எதிர்பாராத ஆதாயமும் மன நிறைவும் உண்டாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உடல் நிலையில் மிகுந்த கவனமுடன் இருக்கவும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வர வேண்டிய பணம் சிறிது கால தாமதமாகவே கிடைக்கும். ஒரு சிலருக்குப் பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் ஆகிய ரேஸ் லாட்டரி மூலம் தன வரவு உண்டாகும். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களுக்கு பொருட் செலவு உண்டாகும். ஆபரேஷன் போன்ற காரியங்களை தள்ளிப் போடுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. உத்தியோகத் துறையினர் உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளிடம் மிக எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. மகான்களில் ஆசிகள் கிடைப்பதன் மூலம் மன நிறைவு அடைவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் தீர்ந்து மன நிம்மதி உண்டாகும். உடம்பில் வாயு, மற்றும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நண்பர்களால் வீண் பொருள் விரையம் ஏற்படலாம். கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், கலைத் துறை சார்ந்தவர்கள், மருத்துவப் பணி செய்பவர்கள், தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள், சினிமா மற்றும் நாடகத் துறைகளைச் சார்ந்தவர்கள், மூலிகை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். கண் காதுகளில் மிகவும் கவனம் தேவை. யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்படுவதன் மூலமாக சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். மறை முக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து சில மாற்றங்கள் ஏற்படும். யாத்திரைகளில் நற்பலன் உண்டாகும். உறவினர்களால் பொருட் செலவு உண்டா
கும். பூமி சம்பந்தமான பிரச்கனைகள் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் இல்லை. அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வங்கிகளில் இருந்த நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். பொழுது போக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற காரியங்களில் தலையிட்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவீர்கள். ஜவுளி நூல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள், மருந்து வியாபாரிகள், அரசுத் துறை சாரந்த உயர் பதவிகளை வகிப்பவர்கள், நெருப்பு சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், ஹோட்டல் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலனகளை அடைவார்கள்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து வரவும்

கடகம் :-

கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். கழிவுப் பொருட்களின் வியாபாரிகள், பொதுத் துறை சார்ந்தவர்கள், மடாதி பதிகள், ஆலயப் பணி செய்வோர்கள், அற நிலையத் துறை சார்ந்த உதவியாளர்கள், மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர் நற் பலன் அடைவீர்கள். உடல் நிலையில் கண் காதுகளில் கவனம் தேவை. குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் ஏற்படுவதன் மூலமாக மன நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம். செய்யாத குற்றங்களுக்காக வீண் அவப் பெயர் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் நீங்கி உறவுகள் பலப்படும் காலமாகும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகி மனமகிழ்ச்சி அடைவீர்கள். காதல் விஷயங்களில் மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தந்தையின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் வந்து சேருவதன் மூலமாகப் புதிய பொருட் செலவுகள் வந்து சேரலாம். புதிய ஆடைகள், அணி கலன்கள் வாங்குவீர்கள். நண்பர்களிடம் முன் கோபம் காரணமாக சில பிரச்சனைகள் ஏற்படும். துலை தூரப் பயணங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வராத பணம் மற்றும் பொருட்கள் திரும்பக் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். தாயின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெகு காலமாக வேலையில்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். கணவன் மனைவி உறவு சுமாராகக் காணப்படும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளால் புதிய மனக் குழப்பங்கள் வரவாய்ப்புள்ளது. பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நல்லது. உடம்பில் இரத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். சகோதரர்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டு. அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதியை அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்படும். காதல் விஷயங்களில் நண்பர்களின் உதவிகள் கிடைப்பதன் மூலம் மன நிறைவடைவீர்கள். தண்ணீர், கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பெர்ருட்கள் விற்பனை செய்வோர்கள், உப்பு வியாபாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஆதாயம் அடைவார்கள் வங்கிகள் மூலமாக எதிர்பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகலாம்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வரவும்

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான நாற்பட்ட வழக்கு விஷயங்களில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்ட விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள். வங்கிகளின் உதவிகளால் பழைய வீடுகளைத் திருத்திக் கட்டுவதற்காக முயற்சி செய்வீர்கள். ஏதிர் பாராத விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டு. பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். கோவில், குளம், மற்றும் சமுதாய முன்னேற்ற நற்பணிகளில் ஈடுபட்டு நற்பெயரெடுப்பீர்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். மின்சாரம், அடுப்பு போன்றவற்றில் சிறு குழந்தைகள் நெருங்காத நிலையில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும். குல தெய்வ வழிபாடு செய்து வரவும். பொதுத் தொண்டுகளில் ஈடு படுவோர்கள் மீது அவப் பெயர்கள் வர இருப்பதால் கவனமுடன் பணி ஆற்றவும். நெருப்பு, காவல்துறை, ராணுவம், தீயணைப்பு போன்ற துறை சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்பவர்கள், காரம் சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழில்கள் செய்வோர்கள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் தங்களது கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதோடு பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து வரவும்.

துலாம் :-

துலாராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். மர வியாபாரம் செய்வோர்கள், அச்சுத்சுத் தொழில் சார்ந்தவர்கள், தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள், காய்கரி வியாரம் செய்வோர்கள், மருத்துவம் சார்ந்த பணி செய்வோர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். தென் திசையில் இருந்து பெண்களால் சில ஆதாயம் உண்டு. உடம்பில் சுரம், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். நீண்ட தூர பயணங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களில் குடும்பத்தில் நடைபெறும். செல்வந்தர்கள் தொடர்பால் நிம்மதி அடைவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் இது வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். நாற்பட்ட விசா சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். நீண்ட காலமாகத் தாய் வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கலாம். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். வெகு தூரங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இரசாயனத் தொழில் மற்றும் கமிஷன், கன்ஸ்டிரக்ஸன் தொழில் செய்வோர்கள், வட்டித் தொழிற் செய்வோர்கள், இரும்பு இயந்திரம் எண்ணை மற்றும் பல சரக்கு சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், அழுகல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் லாபம் அடைவார்கள். உத்தியோகம் இல்லாதவர்களுக்கு புதிய முயற்சிகள் மூலம் உத்தியோகம் கிடைக்கும். உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். வெகு காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுகள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்து வந்த வங்கிகள் மூலமான கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்கலாம். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும். யாத்திரைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய வீடு வாங்குவதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தாய் மாமன் வழியில் சில சுப காரியங்கள் நடக்கும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவுவதோடு செல்வ செல்வாக்கு புகழ் ஆகியவை கூடும். கொடுக்கல் வாங்கல் செய்பவர்களுக்குச் செய் தொழில் நன்றாக இருக்கும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மிகவும் சிரமத்தின் மேல் சரி செய்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சம்பந்தமில்லாத நபர்களால் புதிய பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளதால் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது நல்லது. வெகு தூரப் பயணங்களுக்குத் தீர்த்த யாத்திரைகள் செல்வதைத் சற்று தள்ளிப் போடவும். சூதாட்டத்தின் மூலமாகப் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். காய்கறி வியாபாரிகள், புத்தகம் நோட்டு பேனா பென்சில் வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், சினிமாத் துறை சார்ந்த கலைஞர்கள், கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவீர்கள். வீடுகளில் கவனமுடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பூ, பழம், நறுமணப் பொருட்கள், பூஜை சாதன வியாபாரிகள், உப்பு வியாபாரிகள், கடல் வளத்துறை சார்ந்தவர்கள், தாய் சேய் நல விடுதிகள் நடத்துபவர்கள், பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள் குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள் வந்து நீங்கும். வீட்டை அலங்காரம் செய்வதற்கும் மற்றும் புதிய ஆடைகள் அணிகலன்கள் வாங்குவதற்கும் முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் மேலிடும். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் உண்டாகுவதோடு அவர்களால் சிற் சில ஆதாயம் உண்டாகும். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவதன் மூலம் சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்து காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். தாயின் உடல் நிலையில் ஏற்படுடு வந்த பாதிப்புகள் குறைந்து காணப்படும். விசா சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். தந்தை மகன் உறவுகளில் கவனம் தேவை. அரசியல்வாதிகளால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும். வேற்று மதத்தவர்களால் ஆதாயம் இல்லை.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கலைத்துறையினர்கள் ஆதாயம் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். மன தைரியமுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவதுடன் நற்பெயரெடுப்பீர்கள். வீட்டில் மிகவும் கவனமுடன் இருத்தல் நல்லது. விபரீதமான எண்ணங்களை நினைத்து மனக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். பூ பழம் நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், ஆலயப்பணி செய்வோர்கள். அறநிலைத்துறைகளைச் சார்ந்தவர்கள், கம்ப்யூட்டர் பணி மற்றும் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், குழந்தைகள் காப்பகங்களை நடத்துபவர்கள், இனிப்பு சம்பந்தமான தின் பண்ட பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவார்கள். யாத்திரையில் குழந்தைகள் மற்றும் உடமைகளைக் கவனமுடன் கொண்டு சென்று வருவது நல்லதாகும். கால் கைகளில் கவனமுடன் இருக்கவும. தீராத நாற்பட்ட நோய்கள் தீர்வதற்காக வெகு தூரங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளுவீர்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். வாகனங்களில் எச்சரிக்கையாகப் பயணம் செய்வது நல்லது. காரணமற்ற முன் கோபத்தை தவிர்பதால் வீண் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். பங்காளிகளால் பொருட் செலவுகள் உண்டாகும். செய்தொழில் புதிய மாற்றங்கள் செய்யத் திட்டம் போடுவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் மாறி நல்ல சூழ்நிலை காணப்படும். உத்தியோகம் இல்லாதவர்கள் புதிய உத்தியோக முயற்சிகளில் இன்னும் சற்று கால தாமதம் ஏற்படலாம். நாற்பட்ட உடல் நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவகளால் நல்ல தொரு மருத்துவத் தீர்வுகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். வெளிநாட்டு விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். பழைய பொருட்கள், இரும்பு போன்ற வியாபாரிகள், அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள், வட்டித் தொழிற் செய்வோர்கள், தகவல் மையம் நடத்துவோர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், தரகு ஏஜன்சி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், ஆகியோர் நல்ல பலன்களை அடைவார்கள். உத்தியோகம் பார்பவர்களுக்கு பணி இட மாற்றம் மற்றும் பதவி உயர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- கணபதி வழிபாடு செய்து வரவும்.

*****************
Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author