இராசிபலன்கள் (17-11-2008 முதல் 23-11-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மனச் சந்தோஷமும் உண்டாகும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். எதிர்பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது. திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். உத்தியோகத் துறையினர்களுக்குப் பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும். விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். புதிய வீடுகளை வாங்கப் போட்ட திட்டங்களுக்காக வங்கிகளில் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும். நீண்ட நாட்களாகத் தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயங்களில் எதிர் பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்றுக் கால தாமதம் ஆகலாம். வீடு, நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர்பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட் செலவுகள் உண்டாகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் காரணமற்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். பல காலமாகத் தீராத நோய்களுக்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். காதல் விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் பதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள். குடும்பச் சொத்துக்கள் போன்ற விஷயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். உடம்பில் உஷ்ணம், சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களால் ஆதரவு இல்லை. பண விஷயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்ற தள்ளிப் போடுதல் நல்லது. ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களினால் பணம் கை விட்டுப் போகலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்களில் சிறிய தடைகளின் பேரில் வெற்றி அடைவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
புரிகாரம்:- சிவ வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். புதிதாக வீடு, வாகனம் மற்றும் நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளுக்கு எதிர்பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும். நீண்ட நாட்களாக வராத பணம் கைவந்து சேரக் கூடிய காலமாகும். உறவினர்களால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும். மற்றவர்களை நம்பி பணம் பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாவதோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் ஆதாயம் அடைவார்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பொது நலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நற்பெயர் எடுப்பீர்கள். ஷேர் மார்க்கெட் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்லது. திருமணத் தகவல் மையங்கள், வாகனங்களில் பணியாற்றுவோர்கள், அரசுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். முன்கோபத்தைத் தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. குலதெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோஷங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. வங்கிகளால் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடம்பில் வாயு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாகப் புதிய கட்டிடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. காதல் விஷயத்தில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். குலதெய்வ வழிபாட்டிற்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். மூத்த சகோதரர்களால் பொருட்செலவுகள் வந்து சேரும். உத்தியோகத் துறையினருக்கு இடமாற்றமும் பதவி உயர்வுகளும் வரக் கூடும். தீராத நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். தண்ணீர், கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமாகிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். ஆதரவு அற்ற ஏழைகளுக்காக உதவி செய்து அதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும். அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தைக் கவனிக்கவும். உடம்பில் மூளை, நரம்பு, எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம். சூதாட்டம் போன்ற காரியங்களில் தலையிட்டுப் பொருள் இழப்பு ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது. வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காகப் பணச் செலவுகள் வந்து சேரும். பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்த சுமூகமான உறவுகள் ஏற்படும். புதிய கூட்டுத் தெழில் முயற்சிகளைச் சற்றுக் கால தாமதமாகத் தொடங்குவது நல்லது. எதிர்பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். வராத கடன் கொடுத்துள்ள பணம் எதிர்பாராமல் திரும்பக் கிடைக்கும். நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும்.பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மருத்துவத்திற்காக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடம்பில் தோல் மற்றும் ஈரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். ஆசிரியர்கள், வக்கீல் தொழிற் செய்வோர்கள் லாபம் அடைவர்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

தநுசு:-

தநுசு ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பேப்பர், பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது. பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல சூழ் நிலை காணப்படும். உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். புதிய பெரிய மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். நண்பர்களால் ஆதாயம் இல்லை. பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று. புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹா லட்சுமி வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர்கள். புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்ப உள்ளது. பெண்களால் அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது. விவசாயம் செய்வோர்கள், அரசியல்வாதிகள், கலைத்துறையினர்கள் ஆதாயம் அடைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர் பாராத தன வரவு உண்டாகும்.மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் தடைபட்டிருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- விநாயகர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளாதாரம் வந்து சேரும். உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்துக் காரியத்தில் கவனமாய் இருங்கள். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயத்தில் ஜாதகமான நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட், கணிதம், எழுத்துத் துறை சார்ந்தவர்கள் ஆதாயம் அடைவார்கள். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பிரயாணங்களை மேற் கொள்வீர்கள். போட்டி லாட்டரி மூலமாகத் திடீர் தன வரவுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். பிள்ளைகளால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். காணாமற் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். உடல் நிலையில் வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். அநாதைகளுக்கு உதவுவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். யாத்திரைகளில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும். திருமண விஷயங்களுக்காக முயற்சி செய்யலாம்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

About The Author