இராசிபலன்கள் (20-8-2012 முதல் 26-8-2012 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வாகனங்கள் வாங்குவது போன்ற முயற்சிகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாம். கணவன்-மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். அண்டை, அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லதாகும். வெகு காலமாகக் குடும்பத்துச் சுப நிகழ்ச்சிகளில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கி அவைநடைபெறக்கூடிய காலமாகும். மாணவர்களுக்குக், கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுகளும், பண உதவியும் கிடைக்கும். கண், காதுகளில் கவனத்துடன் இருங்கள்! நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தைரியத்துடன், எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். நெருப்பு, மின்சாரம் போன்ற துறைகளைச் சாரந்தவர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள், இணையத்தளங்கள் நடத்துபவர்கள், கேஸ், வெல்டிங் போன்ற தொழிற்சாலைகளில் பணி செய்வோர் ஆகியோர் நற்பலன் அடைய வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் திருப்தி அடைவீர்கள்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ ஆலய வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, மின்சாரம் போன்றவற்றில் கவனத்துடன் இருப்பது நல்லது. வீட்டைத் திருத்திக் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். பொதுத் தொண்டுகளில் எச்சரிக்கையுடன் பணியாற்றுவது நல்லது. தீர்த்த யாத்திரை சென்று வருவதற்காகப் புதிய கடன்களை வாங்கி அடைப்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். விவசாயம் செய்பவர்கள் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவார்கள். கோர்ட், வழக்கு விஷயங்களில் முடிவுகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகும். கணவன்-மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காதல் விஷயங்களில் சற்றுக் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பிள்ளைகளுக்கு வெகு காலமாகத் தடைபட்டிருந்த சுப காரியங்கள் நடைபெறக் கூடிய காலமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். விசா சம்பந்தமான நாட்பட்ட பிரச்சினைகள் பற்றி நல்ல செய்திகள் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலமாகும். வயிறு தொடர்பான, குறிப்பாக வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். பயணங்களில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லதாகும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய்க் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் இருந்து வந்துள்ள தொல்லைகள் சற்றுக் குறைந்து காணப்படும். நண்பர்கள் உறவினர்களின் சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சற்றுக் கவனத்துடன் இருப்பது நல்லது! அடிமை ஆட்களால் ஆதாயம் இல்லை. குடும்பத்தில் காரணம் இல்லாத விஷயங்களுக்காக வீண் பிரச்சினைகள் வந்து போகும். தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்டிருந்த திட்டங்களில் சில தடைகள் வந்து விலகும். புதிய ஆடைகள், அணிகலன்கள் வாங்குவதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மீன், முட்டை, மாமிசம் போன்ற பொருட்கள் விற்பவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர், அணு ஆராய்ச்சித் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள், சாயப் பௌடர் வியாபாரிகள், துப்புரவுத் தொழில் செய்பவர்கள்
ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். புதிய தொழில்கள் தொடங்குவதற்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். தந்தையின் உடல் நிலைப் பாதிப்புகளால் பொருட் செலவுகள் ஏற்படலாம். புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ் சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு.

கடகம் :-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள். மனைவியின் உடல் நிலைப் பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து நிம்மதி அடைவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும். குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லதாகும். உடம்பில் வாயு மற்றும் வாதம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண காரியங்கள் நிறைவேறும். பழைய பொருட்களை விற்றுப் புதிய பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு மாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும் காலமாகும். தென் திசையில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் வந்து சேரும். தண்ணீர், திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், மருத்துவத் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனைகளை நடத்துபவர்கள், மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் போன்றோரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரும் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய செய்தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சிறிது தடைகள் வந்து விலகும். கணவன்-மனைவி உறவுகளில் சற்றுக் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லதாகும். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். பணப்புழக்கம் சுமாராகக் காணப்படும். பொதுப் பணிகளில் ஈடுபடுவோர் மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் நிலையில், உஷ்ணம், மேகம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் பணம் கிடைக்கலாம். சகோதரர்களால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளும், மனக் குழப்பங்களும் வந்து சேரும். புதிய கடன்களை வாங்குவதால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகக் கூடும் என்பதால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது! வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய செலவுகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. பொழுதுபோக்கு விஷயங்களுக்காக வீண் பணச் செலவுகள் ஏற்படலாம். பயணங்களில்கவனத்துடன் இருங்கள்! பூர்வீகமான இடங்களுக்குச் சென்று வரப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறக்கூடிய காலமாகும். பேப்பர், பேனா போன்ற ஸ்டேசனரி சம்பந்தமான வியாபாரிகள், வங்கிப் பணி புரியும் எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், ஆகியோர் நல்ல பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். எடுத்துக் கொண்ட காரியங்களை மிகுந்த முயற்சியின் பேரில் செய்து முடிப்பீர்கள். இருந்து இன்னும் சற்று நீடிக்கும். பிறருக்காக உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து காணப்படும். புதிய மருத்துவர்களின் உதவியால் நோய்கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். நீண்ட நாட்களாக வராத கடன், கொடுத்திருந்த பணம் போன்றவை பிரச்சினைகளின் பேரில் திரும்பக் கிடைக்கும். மருந்துப் பொருட்கள், மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், காய்கறி வியாபாரிகள், மர வியாபாரம் செய்பவர்கள் நீர்வளத்துறை சார்ந்தவர்கள், மருந்து விற்பனையாளர்கள், அஞ்சல் துறையைச் சார்ந்தவர்ரகள், வங்கிப் பணி செய்பவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். உத்தியோகத் துறையினருக்குப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயர் எடுப்பீர்கள். கண், காதுகளில் கவனம் தேவை! தீராத நோய்க்கு வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும். கணவன்-மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து ஓரளவு மன மகிழ்ச்சி அடையலாம்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்பு, இயந்திரம், டீசல், பெட்ரோல், எண்ணெய் வியாபாரிகள், இஞ்சினியரிங் துறை சார்ந்தவர்கள், கமிசன் தொழில் செய்வோர், கழிவுப் பொருட்களின் வியாபாரிகள், பலசரக்குக் கடை நடத்துவோர் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். மற்றவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள். குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். நீண்ட தூரப் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த காரியங்களில் சில பின்னடைவுகள் ஏற்படும். கணவன்-மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்றுக் குறைந்து காணப்படும். உடல் நிலையில் வாயு மற்றும் வயிற்றுச் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பயணங்களின்போது, சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய வீடு, வாகனங்கள் வாங்குவது போன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் சற்றுத் தாமதம் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து, நண்பர்களால் பொருளுதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம். விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தலை தூக்கும்!

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியாக திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஐயப்பனை வழிபட்டு அன்னதானம் செய்து வாருங்கள்!

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைந்து நிம்மதி ஏற்படும். பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பூர்வீகமான இடங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. செய்தொழிலில் நல்ல லாபம் கிடைத்த போதிலும் சில பிரச்சினைகள் வந்து மிகுந்த முயற்சி எடுத்துச் சரி செய்து விடுவீர்கள். கலைத்துறை சார்ந்த பொருட்களின் வியாபாரிகள், ஆடம்பர, அலங்காரப் பொருள் வியாபாரிகள், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், கமிசன் தொழில் செய்வோர், வீடு, நிலம் போன்ற விற்பனையாளர்கள், நெருப்புத் தொழில் செய்வோர், உணவு விடுதிகளை நடத்துவோர், காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறை போன்ற துறைகளைச் சாரந்தவர்கள் ஆதாயங்களை அடைவார்கள். விபரீதமான எண்ணங்களை நினைத்து வீண் மனக் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்! புதிய கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லதாகும். பிரிந்து போன கணவன்-மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேரக்கூடிய காலமாகும். நண்பர்கள் மற்றும் உற்றார், உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும், நிம்மதிக் குறைவும் உண்டாகலாம். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. உயரமான இடங்களில் மிகுந்த கவனத்துடன் வேலை செய்வது நல்லது.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிற்சாலைகளைத் திருத்தி அமைக்கப் போட்ட திட்டங்களில் வெற்றி அடையலாம். காணாமல் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். நிலம் மற்றும் நகைகளை அடகு வைத்தல் போன்றவற்றின் மூலமாகப் பணம் வந்து சேரும். வேற்று மதத்தவரால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். பயணங்களில், அரசியல்வாதிகள் சிலரின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கவனத்துடன் நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் குறையும். ஒரு சிலருக்கு, நினைத்த இடங்களில் பணியிட மாற்றங்கள் ஏற்படலாம். விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வெளியூர்ப் பயணங்கள் மூலம் இதுநாள் வரை தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள். அரசு வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். தரகு, ஏஜன்சி, கமிசன் போன்ற தொழில் செய்வோர், மீன், முட்டை, மாமிச உணவுகளின் வியாபாரிகள், பழைய பேப்பர், பிளாஸ்டிக்,
பழைய இரும்புப் பொருட்களின் வியாபாரிகள், விஞ்ஞானத்துறை சார்ந்த அலுவலகப் பணி புரிவோர் லாபம் அடைவர்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாடு.

மகரம் :-

மகரராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளால் சில எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் பண உதவியும் நிம்மதியும் உண்டாகும். வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்காக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதில் சற்றுத் தாமதம் ஏற்படும். நாட்பட்ட, தீராத நோய்க்கு விடை காணும் காலமாகும். அண்டை, அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது. புதிய வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சித்த எண்ணங்கள் நிறைவேறும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதைத் தவிருங்கள்!. நிம்மதியின்மை காரணமாகத் தூக்கம் இழக்கவும் காலம் தாழ்த்தி உணவருந்தவும் நேரிடும். பலசரக்கு, இரும்பு, மின்சாரம் இரசாயனம், விஞ்ஞானம், எண்ணெய்கள் போன்ற வியாபாரங்கள் செய்வோரும் அரசுத்துறை சார்ந்த அலுவலக உதவிப் பணி ஆற்றுவோரும், பழைய கழிவுப் பொருட்களான பேப்பர், பிளாஸ்டிக் சம்பந்தமான வியாபாரிகளும் நற்பலனை அடைவீர்கள்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப் பொருட்கள், நறுமணச் சம்பந்தமான பொருட்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள், பேராசிரியர்கள், ஆலயப் பணி செய்வோர், நகை வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தந்தை-மகன் உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப்படும். பயணங்களில், சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிருங்கள்! தாயின் உடலில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். வெகு காலமாகத் திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கித் திருமணம் ஆகும். திடீர் அதிர்ஷ்டமான ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர் பிரச்சினைகளில் அநாவசியமாகத் தலையிட்டு மனக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். பங்குத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். வங்கிகள் மற்றும் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமான அலுவலகங்களில் பணி புரிவோருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சொந்த பந்தங்களுடன் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

மீனம் :-

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். நாட்பட்ட பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்கள் வாங்க முயற்சிப்பீர்கள். வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம். தேவையற்ற புதிய நண்பர்களின் தொடர்புகளால் நிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள்!. மனைவியின் உடல் நலக் குறைவு காரணமாகப் பொருட் செலவுகள் உண்டாகும். கணவன்-மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் ஏமாற்றம் அடைய வேண்டாம். தூரத்து உறவினர்களின் வருகையால் சில சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடல் நிலையில், மேகம், உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளும், அலர்ஜி போன்ற தொற்று நோய்களும் வந்து நீங்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லதாகும். சினிமா, நாடகம், இசைத்துறை சார்ந்தவர்களும், வங்கிப் பணி செய்பவர்களும், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரும் நல்ல பலனை அடைவர்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வௌளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author