இராசிபலன்கள் (30-12-2013 முதல் 5-1-2014 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பொது நலச் சேவைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட விஷயங்களில் பணம் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்! இரும்பு, இயந்திரம், எண்ணெய், பலசரக்கு, மாமிசப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், ஆலை அதிபர்கள், பொறியியல்துறையைச் சார்ந்தவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியவர்கள் நற்பலன் அடைவார்கள்.
விவசாயம் செய்பவர்கள் புதிய விவசாய முறைகளால் நல்ல லாபம் பெறுவார்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது தாய்நாடு சென்று திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! ஒரு சிலர் உற்றார் உறவினர்களால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். படித்த, வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவிக்குள் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். பிரிந்து போன உறவுகளுடன் திரும்பவும் தொடர்பு ஏற்படக்கூடிய காலமாகும். சகோதர சகோதரர்களின் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகுமாகையால் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். எடுத்த காரியத்தைத் துணிவுடன் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வாய்ப்பு உள்ள காலமாகும். காணாமல் போன பொருட்கள் காவல் துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனத்துடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். மின்சாரம், இராணுவம், எரிபொருள், காவல்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், உணவகம் நடத்துபவர்கள், தரகு, கமிசன் போன்ற தொழில்கள் செய்பவர்கள், நில புலன்கள் விற்பனை செய்பவர்கள் ஆகியவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்!

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். தீராத, நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள், ஜவுளி, நூல் போன்ற பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், மருந்துப் பொருள் வியாபாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் / ஆசிரியர்கள், விசைத் தறித் தொழிலாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். ஒரு சிலருக்குப் பணியில் வீண் பிரச்சினைகள் உருவாகிப் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட நோய்கள் தீரப் புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது. காரணமற்ற சஞ்சலங்கள் வர இருப்பதால் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது உகந்ததாகும்! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட்செலவுகள் உண்டாகலாம். வாயுத் தொல்லை, வயிற்றுத் தொல்லை போன்ற உபாதைகள் வந்து போகலாம். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடவும்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். சகோதர சகோதரிகளின் தடைப்பட்ட திருமணக் காரியங்கள் மற்றவர்களின் உதவியால் நிறைவேறும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். ஒரு சிலர் பணியிடம், வீடு ஆகியவற்றை இடமாற்றம் செய்வீர்கள். பொதுநலத் தொண்டுகளில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயரும் புகழும் அடைய வாய்ப்பு உள்ளது. காய்கறிகள், இலை, பூ, பழம் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள், தின்பண்ட வியாபாரிகள், மருந்துவத்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், அச்சுத்தொழில் செய்வோர், அஞ்சல்துறையினர் ஆகியவர்கள் நற்பலன் அடைவார்கள். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தினரிடமிருந்து எதிர்பார்த்த செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வரக் கூடிய காலமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட காலமாகப் பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் உண்டாகும். மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், மடாதிபதிகள், துறவிகள், கழிவுப் பொருள் வியாபாரிகள் ஆகியவர்கள் நற்பலன் அடைவார்கள். மனைவி திடீரென நோய்வாய்ப்பட இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்! அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் சற்றுக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடவும்! விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசு, பாராட்டுதல்களோடு அரசு ஆதரவையும் பெறுவார்கள். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆதரவற்றோர் இல்லம் நடத்துதல் போன்ற பொதுத்தொண்டுகள் செய்வோருக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலமாகவோ அல்லது செய்யும் தொழிலிலோ திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேர வாய்ப்பு உள்ளது. பயணங்களின்போது கவனத்துடன் சென்று வரவும்! முன் கோபம் தவிர்த்தல் நல்லது! திரவப் பொருள் வியாபாரிகள், உப்பு, உர வியாபாரிகள், கப்பல் பணி செய்பவர்கள், சுவாமி படங்கள், பூஜை சம்பந்தமான பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்த அரசு அதிகாரிகள், மீன்பிடித் தொழில் செய்பவர்கள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள் ஆகியவர்கள் நற்பலன்களை அடைவார்கள். மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் உண்டாகும். கண், காது, தலை போன்ற பாகங்களில் சிற்சில உபாதைகள் ஏற்படலாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயமும் நற்செய்திகளும் வந்து சேரும். குடும்பச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் திரும்பக் கிடைக்கும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். பழைய இரும்பு, இயந்திரம், வேதிப்பொருட்கள் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், அணு ஆராய்ச்சித்துறையில் பணியாற்றுபவர்கள், அரசியல் அறிஞர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப்பொருட்களின் வியாபாரிகள், கணினித்துறையினர், நாடகத்துறை சார்ந்தவர்கள், வேலையாட்கள், ஆலைப் பணியாளர்கள் ஆகியவர்கள் நற்பலன் அடைவார்கள். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான நற்பலனே கிடைக்கும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவதோடு புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைச் செய்யப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். தந்தை – மகன் உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும். மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற வேண்டாம்! வாயு, வாதம் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது! பழுதுபட்ட பழைய வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட்செலவுகள் வந்து சேரும்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். பணியாட்களால் பிரச்சினைகளும் பொருள் இழப்பும் வர இருப்பதால் கவனம் தேவை! தரகு, கமிசன் போன்ற தொழில்களில் இருப்போர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதாகும்! பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் – மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள். நீண்ட நாட்களாக வராத கடன், கொடுத்து இருந்த பணம், பொருட்கள் போன்றவை திரும்பக் கை வந்து சேரும். பொதுத்தொண்டுகளைச் செய்பவர்கள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள் / மாணவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், கட்டட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியவர்கள் மிகவும் நற்பலன் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டுகளும் பெறுவதோடு அரசு உதவித்தொகையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திடீர் அதிர்ஷ்டமாகிய பந்தயம், பரிசுச்சீட்டு, பங்குச்சந்தை போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். விட்டுப்போன பழைய உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் வீட்டுச் சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் உறவினர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதால் புதிய தொடர்புகளைத் தவிர்த்தல் நல்லது! பொதுத்தொண்டு நிறுவனத்தவர்கள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், நகை வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், இனிப்புப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், பூ, பழம், நறுமணப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள் ஆகியவர்கள் நற்பலன்களை அடைவார்கள். அலுவலகப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளிடம் மனக் கசப்பு ஏற்பட்டுப் பணியிட மாற்றம் ஏற்பட இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணியாற்றுதல் சிறந்ததாகும்! பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! வராத கடன், கொடுத்து இருந்த பணம் ஆகியவை திரும்பக் கை வந்து சேரும்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் திருப்தி அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் எதிர்பாராத பொருட்செலவு ஏற்படலாம். வட திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். தொழிற்சாலை, வீடு ஆகியவற்றை இடமாற்றம் செய்ய எண்ணுவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான பலன்கள் கிடைக்கும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்! பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்காக எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவித்தொகைகள் நண்பர்களின் உதவியால் கிடைக்கும். முதியோர் இல்லம் நடத்துபவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு வியாபாரிகள், தண்ணீர், குளிர்பான வியாபாரிகள், பூஜைப்பொருள் வியாபாரிகள் ஆகியவர்கள் நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது சிறந்ததாகும்! விபரீதமான எண்ணங்களைக் கை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருப்பது நல்லது!

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! திருமண சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்றுத் தாமதமாகவே நடத்துவது சிறந்ததாகும்! மாணவர்களுக்குப் புதிய படிப்புகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். சுரம், உடற்சூடு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! தடைப்பட்டுப் போன சகோதர சகோதரிகளின் சுப காரியம் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்து சேரும். இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற எரிபொருட்களின் வியாபாரிகள், பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், பலசரக்கு வியாபாரிகள், வட்டித் தொழில் செய்பவர்கள், தரகு, ஏஜன்சி, குத்தகை போன்ற தொழில்களைச் செய்பவர்கள் ஆகியவர்கள் லாபம் அடைவார்கள். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து வந்த பண உதவி கிடைக்கும். வராத பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, நில புலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் காளி மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்னதானமும் செய்து வரவும்!

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வேலையாட்களிடம் எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம்! பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத நபர்களுடைய தொடர்புகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். பூர்விகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் வரக் கூடுமாகையால் கவனத்துடன் இருக்கவும்! நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணக் காரியங்கள் நிறைவேறும். கட்டட சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், நடிப்புத்துறை சார்ந்தவர்கள், ஊதுபத்தி, சந்தனம் போன்ற நறுமணப்பொருள் வியாபாரிகள், விபூதி, குங்குமம் போன்றவற்றை விற்பவர்கள் ஆகியவர்கள் நற்பலன் அடைவார்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற சஞ்சலங்களைத் தவிர்க்கவும்! குலதெய்வ வழிபாடுகளைச் செய்து வருவது நல்லது! உற்றார் உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹா லட்சுமி ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வரவும்!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author