இராசிபலன்கள் (5-8-2013 முதல் 11-8-2013 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்குவீர்கள். பெண்கள் சம்பந்தமான விஷயங்களில், செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது! அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! சமுதாய முன்னேற்றத்துக்கான பணிகளில் ஈடுபடுதல், ஆதரவற்றோர் ஆசிரமங்கள், பொதுத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணி ஆற்றுதல் போன்றவற்றின் மூலம் நிம்மதி, பெயர், புகழ் அடைவீர்கள். அலுவலகப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் வீண் மன சஞ்சலமும் பணியிட மாற்றமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பொறுப்புடன் பணி ஆற்றுதல் நல்லது! பணியாட்களால் விரயமும் மன உளைச்சலும் உண்டாகும். பொருளாதாரம் சம்பந்தமாகத் தொலை தூரப் பயணங்களை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வர முயற்சிப்பீர்கள். நூல், ஆடை போன்றவற்றை விற்பவர்கள், மருந்து நிறுவனங்களை நடத்துபவர்கள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள், நெருப்பு சம்பந்தமான தொழிற்சாலைகளை நடத்துபவர்கள், வெளிநாட்டுத் தூதரகங்களில் பணி செய்பவர்கள், உணவகம் நடத்துபவர்கள், அரசுத் துறை சார்ந்த ஆலயப் பணியாளர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள்! பிள்ளைகளின் சுப நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டு விஷயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு. பழைய கடன்களை அடைப்பதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமை உண்டாகும். பயணங்களில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பெண்களால் தங்கம், செம்பு, வெள்ளி போன்ற உலோகப் பொருட்களின் வியாபாரிகள் லாபம் அடைவர். தவிர, மருத்துவத்துறை சார்ந்தவர்கள், நில புலன்களை வாங்கி விற்போர், கேஸ் வெல்டிங், உணவகம் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தென் திசையில் இருந்து நற்செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வந்து சேர இருப்பதால் கவனமாக இருத்தல் நல்லது. தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அவற்றால் நன்மை அடைவீர்கள்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு.

மிதுனம்:-
 
மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். மஹான்களின் தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். அலுவலகப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்திருந்த இட மாற்றம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பண வரவுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினை தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான பணிகளைச் செய்பவர்கள், பழைய/கழிவுப் பொருள் வியாபாரிகள், பலசரக்கு வியாபாரிகள், கல், மணல் வியாபாரிகள், அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் வகைகளை விற்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். கண், காது, நரம்பு, எலும்பு ஆகியவற்றில் சில உபாதைகள் வந்து போகும். தீராத நோய்களுக்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கக் கூடிய காலமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். வர வேண்டிய கடன், கொடுத்து இருந்த பணம், பொருட்கள் ஆகியவை வந்து சேரும். வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடு.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்!. தந்தை – மகன் உறவுகளில் பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும். புதிய வீடு, வாகனம் வாங்குதல், தொழிற்சாலை இடமாற்றம் ஆகியவற்றுக்காகப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். ஒரு சிலருக்குக் கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒவ்வாமை, சளி போன்ற உபாதைகள் வந்து போகும். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட்செலவுகள் வந்து சேரலாம். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக் கூடிய காலமாகும். எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். வாயுத் தொல்லை, வயிற்று உபாதை ஆகியவை வந்து போகலாம். குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவுகளைச் சந்தித்துத் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு, ஆஞ்சனேயர் வழிபாடு.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும். காதல் விஷயத்தில் எதிர்பார்த்திருந்த தகவல்கள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். நிலக்கரி, பெட்ரோல், டீசல், பலசரக்கு, எண்ணெய் ஆகியவை சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், காவல்துறை, ராணுவம் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், தீயணைப்பு நிலையப் பணியாளர்கள் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், நில புலன் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பண வரவு உண்டாகும். எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். வர வேண்டிய, நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும். வெகு காலமாகக் கட்டப்படாத ஆலயத் திருப்பணிகளை எடுத்துச் செய்வீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பயனடைவார்கள். பழமையான கட்டடங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் ஏற்படலாம்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளால் ஆதாயம் ஏற்படாது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றை நம்பி ஏமாறாதீர்கள்! நண்பர்கள், உறவினர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். வெகு காலமாக வராதிருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பழைய பேப்பர், பழைய இரும்பு போன்ற கழிவுப் பொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சி போன்ற அறிவியல்துறை சார்ந்த பணியாளர்கள், மத போதகர்கள், அழுகுபொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வாயு, வாதம் சம்பந்தமான சிற்சில தொல்லைகள் வந்து போகும்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மனநிறைவு அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வ வழிபாடுகளைச் செய்து வருவீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் காணப்படும். பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும். பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் பயணம் செய்து வருவது நல்லதாகும். அழுகுபொருள் வியாபாரிகள், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், மடாதிபதிகள், அலுவலக உதவிப் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடு.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வர வேண்டிய பணம் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பயணங்களில் புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்கள் அடைவீர்கள். சகோதர சகோதரிகளின் தடைப்பட்ட திருமணக் காரியங்கள் நிறைவேறும் காலமாகும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு அவமானப்பட இருப்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லதாகும். பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம், முதியோர் இல்லம், தாய் – சேய் நல விடுதி போன்றவற்றை நடத்துபவர்கள், தின்பண்ட வியாபாரிகள், பேராசிரியர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். உற்றார் உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! பிள்ளைகளால் நிம்மதியும் பொருள் வரவும் உண்டாலாம். ஆதரவற்றோ சிறுவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தை – மகன் உறவுகளில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- வியாழக்கிழமையில் தட்சிணா மூர்த்தி வழிபாடு.

தனுசு:-

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். மனைவிக்குச் சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டங்களை நம்பி ஏமாற்றம் அடையாமல் இருங்கள்! மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்! கலைப்பொருள் விற்பனையாளர்கள், கலைஞர்கள், நகை வியாபாரிகள், உணவுக்கூடம் நடத்துபவர்கள், அழகுக்கலைக்கூடம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் ஏமாற்றம் அடையாமல் இருங்கள். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்காக எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பதால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கை வந்து சேரும். வெளிநாடு சென்று வர வெகு காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். குடும்பச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். கட்டட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், கட்டில், மெத்தை போன்ற ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், திரைப்பட, நாடகத் துறைகளைச் சார்ந்தவர்கள், அழகுக்கலைக்கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். சூதாட்டங்களால் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருங்கள்! மாணவர்களுக்குக் கல்வியில் பரிசும் பாராட்டும் கிடைக்கக் கூடும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பெண்களால் தென் திசையில் இருந்து எதிர்பாராத பண வரவு உண்டாகும். அலுவலகப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேற்று மதத்தவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வழக்கு விஷயங்களுக்காகப் புதிய வழக்கறிஞர்களின் உதவியை நாடி அவர்களால் நன்மை அடைவீர்கள். பூர்விகச் சொத்துக்கள் கை வந்து சேரக் கூடிய காலமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலமாக நிம்மதி அடைவீர்கள். குலதெய்வ ஆலயத் திருப்பணிகளுக்கான விஷயங்களில் பணியாற்றுவதன் மூலம் நற்பெயர், புகழ் ஏற்படும். ஒப்பந்தத் தொழில் செய்பவர்கள், காய்கறி வியாபாரிகள், அச்சுத் தொழிற்சாலை நடத்துபவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், வங்கிகளில் பணிபுரிவோர், எழுதுபொருள் வியாபாரிகள் ஆகியோர் ஆதாயம் பெறுவர். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். மஹான்களின் சந்திப்புகளால் நிம்மதி அடையலாம். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்!

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. புதிய நண்பர்களிடம் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் உதவியால் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பூஜைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் ஆதாயம் அடைவீர்கள். குலதெய்வ ஆலயத் தொண்டுகளைப் பிரியத்துடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். நீண்ட தூரப் பயணங்களின் மூலமாக எதிர்பார்த்த பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் மிகவும் கவனம் தேவை! காதல் விஷயத்தில் அனுகூலம் ஏற்படாது. தலைவலி, முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். நண்பர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

–மீண்டும் அடுத்த வாரம்…
*****************

Gnanayohi.Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com

About The Author