இராசிபலன்கள் (8-10-2012 முதல் 14-10-2012 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, ராகு நன்மை தரும் கிரகமாகும். புதிதாக வீடு, வாகனம், நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வெகு காலமாக எதிர்பார்த்து வந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாதீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது! தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி அதனால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். கணவன் – மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும். நீண்ட நாட்களாக வராத பணம் கை வந்து சேரக் கூடிய காலமாகும். உறவினர்களால் வீண் பொருட்செலவுகள் உண்டாகும். மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருளையோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், உப்பு மற்றும் உர வியாபாரிகள், திரவப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் ஆதாயம் அடைவர்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். உடல் சூடு, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகும். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்களில், நீண்ட காலமாக ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கி வெற்றி அடைவீர்கள். கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் புதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள். பண விஷயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களினால் பணம் கை விட்டுப் போகலாம். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டுக் கவலை அடையாதீர்கள்! குடும்பத்தில், தடைப்பட்டு வந்த திருமணக் காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! உத்தியோகத் துறையினருக்குப் பணியிட மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்து வந்த காரியங்கள் நிறைவேறும். குடும்பச் சொத்துக்கள் போன்ற விஷயங்களில் நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். இனிப்புப் பொருள் வியாபாரிகள், கணினித்துறையைச் சார்ந்தவர்கள், பழ வியாபாரிகள், ஆலயப் பணிகள் செய்பவர்கள், அறநிலையத்துறையைச் சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர் லாபம் அடைவர்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மிதுனம் :-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, கேது நன்மை தரும் கிரகமாகும். அணுஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், பழைய இரும்புப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோருக்கு மிகுந்த லாபம் உண்டாக வாய்ப்பு உள்ளது. ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்டங்களில் மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது! கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கிச் சுமூகமான சூழல் உருவாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில், எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். பல காலமாகத் தீராத நோய்கள் புதிய மருத்துவர்களின் உதவியால் நீங்கும். காதல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! புதிய நண்பர்களின் சேர்க்கையால் காரணமற்ற பிரச்சினைகள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள்! தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது! வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில், அரசு சம்பந்தமாக எதிர்பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட்செலவுகள் உண்டாகலாம்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- விநாயகர் வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

கடகம் :-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, புதன் நன்மை தரும் கிரகமாகும். ஒரு சிலருக்குப் புதிய இட மாற்றம் ஏற்படக் கூடிய காலமாகும். முன் கோபத்தைத் தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! குல தெய்வ வழிபாடு செய்து வருவதால் கிரக தோஷங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள், மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது! வெகு காலமாக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். விவசாயிகள், புதிய முறை விவசாயங்களால் நல்ல லாபம் அடைவார்கள். தந்தை – மகன் உறவுகளில், சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாயுத் தொல்லை, வயிற்று உபாதைகள் போன்றவை வந்து போகும். திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், வாகனங்களில் பணியாற்றுபவர்கள், அரசுத்துறை சார்ந்த வழக்கறிஞர்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், கலைத்துறை சார்ந்தவர்கள், கட்டட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். சமுதாய முன்னேற்றத்திற்கான பொது நலக் காரியங்களுக்காக, மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பங்குச் சந்தை சார்ந்தவர்கள், நகை வியாபாரிகள் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்லது!

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்டங்களால் பொருள் இழப்பு ஏற்படலாம். உத்தியோகத்தில், மேலதிகாரிகளிடம் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது! வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காகப் பணச் செலவுகள் வந்து சேரும். பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. நெடு நாட்களாகப் பிரச்சினையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும். அரசு வழக்குகளில், சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தில் மிகக் கவனமாய் இருங்கள்! எழுதுபொருள் வியாபாரிகள், அச்சுத்துறை சார்ந்த பொருட்களின் விற்பனையாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம். காணாமல் போன பொருட்கள், காவல் துறையினரின் உதவியால் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். ஆதரவற்ற ஏழைகளுக்காக உதவி செய்து அதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மூளை, நரம்பு, எலும்பு போன்றவற்றில் உபாதைகள் வந்து போகலாம்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். சகோதர சகோதரிகளின் திருமணக் காரியங்களில் நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த தடைகள் விலகும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். பொதுநலப் பணி, ஆலயத் திருப்பணி போன்றவற்றில் தலையிட்டு நற்பெயர் எடுப்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள், நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். இரும்பு, இயந்திரம், இரசாயனம், அணு ஆராய்ச்சி போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டங்கள் தொடர்பாக நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய வீடு வாங்கப் போட்ட திட்டங்களுக்காக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கிடைக்கக் கூடிய காலமாகும். உற்றார் உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகத்துறையினருக்குப் பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவுகள் போன்றவை நிரம்ப உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள சிக்கல்கள் தீர்ந்து சுமாராகக் காணப்படும். எதிர்பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- அம்மன் மற்றும் பிதுர் வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

துலாம் :-

துலாம் ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, புதன் நன்மை தரும் கிரகமாகும். தாய்வழிச் சொத்துக்களில் இருந்த வந்த பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். பணியாட்களிடம் சற்றுப் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது! நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். காதல் விஷயத்தில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். குல தெய்வ வழிபாட்டிற்காகத் தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். குடும்பத்தில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. திரவப் பொருள் வியாபாரிகள், நகை வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். மூத்த சகோதரர்களால் பொருட்செலவுகள் வந்து சேரும். உத்தியோகத்துறையினருக்கு இட மாற்றமும் பதவி உயர்வும் வரக் கூடும். புதிய கட்டடம் கட்ட நீண்ட காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர்த் தனவரவு உண்டாகும்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று! புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். நண்பர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிம்மதி அடைவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள், பெரிய மனிதர்களின் தலையீட்டால் தீர்ந்து, நல்ல சூழ்நிலை காணப்படும். நாட்பட்ட நோய்கள் நீங்கி நிம்மதி உண்டாகும். புதிய பெரிய மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். எழுது பொருட்களை வியாபாரம் செய்பவர்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்களின் விற்பனையாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் நல்ல லாபம் அடைவர். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மஹான்களின் தரிசனங்களால் நிம்மதி அடையக்கூடிய காலமாகும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

தனுசு :-

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வாயு, வாதம் போன்ற தொல்லைகள் வந்து போகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில், பிற மதத்தவர்களிடமிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். போட்டி லாட்டரி மூலமாகத் திடீர்த் தன வரவு உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது! திருமண விஷயங்களுக்காக முயற்சி செய்யலாம். ஆதரவற்றோருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், ஹோட்டல் தொழில் செய்பவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், தீயணைப்புத் துறையைச் சார்ந்தவர்கள், தங்க நகை வியாபாரிகள், காரமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்வோர் ஆகியோர் ஆதாயம் அடைவர். பிள்ளைகளால், எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- துர்க்கை வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கண், காது ஆகியவற்றில் மிகவும் கவனம் தேவை! கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பணம் வந்து சேரும். முதுகு, வயிறு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். பயணங்களின்போது புதிய பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டாகி, அவர்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்! பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், ஹோட்டல் தொழில் செய்பவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், தீயணைப்புத் துறை சார்ந்தவர்கள், தங்க நகை வியாபாரிகள், கேஸ் வெல்டிங் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், எரிபொருள் வியாபாரிகள் ஆகியோர் ஆதாயம் அடைவர். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து, காரியத்தில் கவனமாய் இருங்கள்! சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில், வேற்று மதத்தவரால் சில எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சனி நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகத்துறையினர், மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி நிம்மதியை இழந்து விடாமல் எச்சரிக்கையுடன் இருங்கள்! குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெற்றவர்களின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு, மருத்துவத்திற்காக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளைச் சற்றுத் தாமதமாகத் தொடங்குவது நல்லது! தோல், ரத்தம் சம்பந்தமான பிணிகள் வந்து போகும். ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், இரசாயனத்துறை சார்ந்தவர்கள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், தானிய உணவுப் பொருள் வியாபாரிகள் போன்றோர் லாபம் அடைவர். வட திசையிலிருந்து, எதிர்பாராத பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். வராதிருந்த கடன் எதிர்பாராமல் திரும்பக் கிடைக்கும். நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் மிகவும் முயன்று அதைச் சமாளித்துக் கொள்வீர்கள். பயணங்களில் கவனம் தேவை! கணவன் – மனைவி உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து, சுமூகமான உறவு ஏற்படும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

மீனம் :-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வட்டி, கமிஷன், ஏஜன்சி போன்ற தொழில் செய்பவர்கள், இரும்பு, இயந்திரம், இரசாயனம் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பணியாட்கள், பலசரக்கு, எண்ணெய் போன்ற பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன் அடைவர். திடீர் அதிர்ஷ்டம் மூலமும், சம்பந்தம் இல்லாத நபர்கள் மூலமும் எதிர்பாராத தன வரவு உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்ட மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர்கள். குடும்பத்தில், தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கண்களில் கவனத்துடன் இருத்தல் நல்லது. மாணவர்கள், கல்வியில் நல்ல மதிப்பெண், பரிசுகள், பாராட்டுகள் ஆகியவற்றைப் பெறுவார்கள். மனைவியின் உடல்நிலையில் சிற்சில பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மருத்துவச் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களால் கெட்ட பெயர் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது! விவசாயிகள், அரசியல்வாதிகள், கலைத்துறையினர் ஆகியோர் ஆதாயம் அடைவர்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருதல்.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author