கவின் குறு நூறு-19

57
பல் முளைக்காதபோது
பற்பசை கேட்டு அடம்;
பற்கள் முளைத்தபோது
துலக்கமாட்டேன் போ என்று அடம்.

58
கவின் தூக்கத்துள் நுழையக்
கனவுகளுக்குள் கடும் போட்டி;
அப்படியே தான் அவன்
கனவுகளுக்குள் நுழைய
நட்சத்திரங்களுக்குள்ளும்
கடும் போட்டி.

59
அவன் உருட்டி விளையாடிய
வண்டியின் சக்கரங்கள்
உடைந்த பிறகும் ஓடிக்
கொண்டிருக்கின்றன இன்ப நினைவுகளில்.

About The Author