கவின் குறு நூறு-23

70

கவின் கடற்கரை மணலுள்
கால்களை மூடிக்கொண்டான்
கரை மணல் தேடிய சுகம் அந்தக்
கடலினும் பெரிதாக விரிந்தது

71

வயதான கடல் இன்னும் இளமையோடு….
என்ன காரணம்
கவின் பார்வை படுகிறது
அதன் மீது என்பது தவிர?

72

உடைகளை உடுத்தாதபோது
அவனிடம் அழகை
நிர்வாணம் அழகுபடுத்துகிறது;
உடைகளின் தேசம் மனம்
உடைந்து போகிறது.

About The Author