நத்தை

நத்தை ஒன்று போகுது

நகர்ந்து மெதுவாய் செல்லுது

ஊர்ந்து செல்லும் பாதையை

உற்றுப் பார்த்தால் ஈரமாம்

கொம்பிரண்டின் உதவியால்

குறிப்பறிந்து கொள்ளுது

குறுக்கே வரும் தடைகளால்

கொஞ்சம் வழியை மாற்றுது

எதிரி யாரும் வந்திட்டால்

என்ன செய்யும் நத்தை தான்

முதுகில் சுமக்கும் கூட்டுக்குள்

முடங்கி சுருண்டு படுத்துக்கும்!

About The Author