பாபா பதில்கள் – எனக்கு வேண்டியது Results

திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,

எனக்கு வேண்டியது Results

In anything I am different. The way I work, the way I plan my life. I plan my life with meticulous perfection; so too official work, my interaction. I am a totally productive person.. நிறைய நல்ல காரியங்கள் செய்வேன். கரெக்டாக ரிசல்ட் வந்தது என்றால் செய்வேன். இல்லைன்னா மாற்றிவிடுவேன். Ego எல்லாம் பார்க்க மாட்டேன். நாம் ஆரம்பித்துவிட்டோமே இதை எடுத்துவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைக்க மாட்டேன். எனக்கு வேண்டியது results . அது வரலைன்னா நான் என்னுடைய scheme ஐ withdraw பண்ணிடுவேன். இன்னொரு ரூட்டில் போய் பார்ப்பேன். Over the years I have been trying various permutations and combinations and everything is God given இதை நாம் productive ஆக use பண்ணி இன்னும் விருத்திக்கு கொண்டு வரணும் என்கிற ஒரு பாயிண்டில்தான் போவேன். Qualitatively I have done a beautiful organisation. மக்களிடமிருந்து வாங்கின காசில் கோடீஸ்வர சாமியாராக இருப்பதை விட நான் என்றைக்கும் கொடுக்கிற சாமியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

Babaஒரே அளவுகோல்

நான் உன்னிடம் ஏதாவது கேட்கிறேனா? Royalty தான் என்னுடைய ஒரே அளவுகோல் நீ எனக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. உன் பணத்தை உனக்கே திருப்பிக் கொடுக்கிறேன். நீ வேண்டாம் என்றாலும் உன் பெயரில் invest பண்ணிவிடு, எப்போது வேண்டுமானால் எடுத்துக் கொள் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

I have no interest in materialistic things.

நான் ரொம்ப வித்தியாசமானவன்

நிறைய பேர் சாமியாராகிறார்கள். எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்களா? பரமாச்சார்யார் ஒரு வகையான சாமி. இராம்சுரத்குமார் சாமி ஒரு மாதிரி. இரத்தினகிரி சாமி ஒரு வகை. கோடி சாமி ஒரு வகை. கிருஷ்ணவேணி அம்மா ஒரு வகை. நான் ஒரு மாதிரி. நான் ரொம்ப வித்தியாசமானவன். என்னுடைய வழிமுறைகள் வேறு. எந்த மடாதிபதி சாப்பிடுகிறார் என்றாலும் திரை போட்டு விடுவார்கள். பரமாச்சார்யார் அப்படி அல்ல. ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர். அதற்கு என்ன பெரிய ரகசியம் வேண்டியிருக்கிறது? அவர் சாப்பிடுகிற வாழைப்பழ சத்துமாவையும், நாலு திராட்சையும் பார்த்தால் என்ன ஆகிவிடும்? இன்றைக்குள்ள நிறைய மடாதிபதிகளைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் உன் கண் எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நானாவது டேஸ்டியாக சாப்பிடுகிறேன். அவர்கள்அது கூட கிடையாது.

நான் ஏன் இப்படி சாப்பிடுகிறேன் என்றால் நான் உங்கள் எல்லாருக்கும் கொடுத்துவிட்டுத்தான் சாப்பிடுகிறேன். ‘எல்லோரும் சாப்பிட்டீங்களா?’ன்னு மைக் வைத்து கேட்ட பின்புதான் சாப்பிடுகிறேன். இது தர்மம். விருந்து புறத்ததா தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று. ஒரு விருந்தாளி இருக்கிற போது அமிர்தம் கிடைத்தால் கூட அவனை விட்டு விட்டு சாப்பிடக்கூடாது. நாம் அந்த மாதிரி கொடுத்துவிட்டு சாப்பிடுவதனால் உங்கள் முன்னால் உட்கார்ந்து சாப்பிடுகிறேன்.

About The Author