பாபா பதில்கள் – சத்தியம், அன்பு

சத்தியம்:

2 X 2 = 4

உங்க தாத்தா படித்த காலத்திலும் 4 தான். நேற்றும் 4 தான். இன்றும் 4 தான். நாளைக்கு உன் பேரக் குழந்தைங்க படிக்கிற காலத்திலும் 4 தான். உண்மை என்பது மாறாதது. Truth is something which can never be negated. எந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நமக்கு எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி விடை கிடைக்கிறதோ அதுதான் Truth. அது உண்மையா இல்லையா என்பதை லிட்மஸ் பேப்பரை வைத்து கண்டுபிடித்துக் கொள். மாறாத விடை எதுவோ, மாறாத தர்மம் எதுவோ, அதுதான் சத்தியம். மாறிவிட்டால் அது சந்தர்ப்பவாதம். சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி மாறும்.

மாறாத நித்தியம் ஏதாவது இருந்தால் அதுதான் சத்தியம். மாறவே கூடாது. It should be permanent. அந்த அளவுகோலை பயன்படுத்திப் பார்த்தால் எது சத்தியம் என்று உங்களுக்கே தெரிந்துவிடும். அதைச் சொல்வதற்காக இன்னொருவன் தேவையில்லை.ஞானத்தைத் தேட வேண்டும் என்ற எண்ணமே இந்த உலகம் மாயை என்று தெரிந்து கொண்ட பின் தான் வரும்.

அன்பு:

எந்த செயலையும், நீ செய்வதற்கு முன்னாலே-இதனாலே யாருக்காவது பிராப்ளம் வருமா, வருத்தம் வருமா அப்படின்னு உன் மனதையே கேட்டுப் பார். மனது இல்லைன்னு சொன்னா நீ ஒரு தப்பும் செய்யவில்லை என்றுதான் அர்த்தம். குற்ற உணர்வை மனதில் சுமந்து கொண்டிருக்காதீங்க. தவறை விட செய்ததை நினைத்து வருத்தப்படுவது தான் ரொம்ப மோசமானது. ‘இந்தக் குற்றத்தை நான் செய்துவிட்டேனே’ என்று நீ வருத்தப்படுகிறாய் இல்லையா that will pull you down. So, do not carry the sense of guilt. Either, believe something and do. or don’t do; don’t carry the sense of guilt. Learn lessons from mistakes. நமக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை என்று முடிவு செய்து விட்டால் மற்றவர்களுக்கு பயன்படுகிற வகையில் ஏதாவது ஒரு தொண்டு செய்யலாம்.
மற்றவர்களுக்கு நீ பயன்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. அப்படியெல்லாம் எந்த சாஸ்திரமும் சொல்லவே இல்லை. நீ உனக்கு பயன்பட்டாலே நீ கூட கடவுள்தான். கடவுள் தன்மையை அனுபவித்து விடலாம். மற்றவர்களுக்கு தொந்திரவு தரக்கூடாது அவ்வளவுதான். எதற்காக மற்றவங்களுக்கு சேவை செய்கிறோம் என்றால், அப்போது தான் நமக்குள்ளே இருக்கிற அன்பை நாம் வெளியில் கொண்டு வர முடியும். நம்மகிட்டே இருக்கிற அன்பை வெளியே கொண்டு வருவதற்கான பிரயத்தனம்தான் மற்றவர்களிடம் நாம் காட்டுகிற அன்பு.

About The Author