பாபா பதில்கள்

ஆன்மீகத்திற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?

Sivaஜோதிடம் என்பது ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று சொல்லுகிற விஷயம். இன்னும் சொல்லப் போனால், நான் ஜோதிடத்தை பெரிய அளவிற்கு ஏற்றுக் கொள்வதே இல்லை. மகான்களுடைய power நவக்கிரகங்களுக்கும் மேல் என்று என்னைப் பற்றி ஓலையில் வருகிறது. அப்போது நான் கிரகங்களுக்கு மேல் வேலை செய்பவன். 

ஜோசியம் என்பது 1960-ல் பிறந்த ஒருவருடைய Balance Sheet as on that date எப்படி என்று சொல்லும். Assets and Liabilities பற்றிச் சொல்லும். ஒரு பெண்ணிற்கு மூல நட்சத்திரம் என்றால், நீங்கள் ‘பெண் மூலம்-நிர்மூலம்’ என்று சொல்லி விட்டுவிடுவீர்கள். நாங்கள் அப்படி அல்ல! அவள் பிறந்ததிலிருந்து இன்று வரை எத்தனையோ பூஜைகள் செய்திருப்பாள். இறைவனை வழிபட்டிருப்பாள். நல்ல காரியங்களைச் செய்திருப்பாள். அதனுடைய பலனை கொடுக்க வேண்டும் இல்லையா? அதை நாங்கள் assess பண்ணி ஒரு latest balance sheet போடுகிறோம். As on present date balance sheet liabilities போட்டு liabilities கிடையாது என்று declare செய்து விடுகிறோம். அப்போது ஆன்மீகம் என்பது கிரகங்களுக்கு அப்பாற்பட்ட, விதியையும் மாற்றக்கூடிய நிலையோடு செயல்படக் கூடிய ஒரு இறை ஆற்றல். ஜோசியத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. 

ஜோசியம் என்பது ஒரு உண்மையான அருளாளனுடைய சக்திக்கு கால்தூசு கூட கிடையாது. ஜாதகத்தைப் பார்த்துச் சொல்பவர்களால் எதையும் மாற்றிவிட முடியாது. முக்கால்வாசி ஜோசியக்காரர்கள் கஷ்டத்தில் இருப்பார்கள். மாற்றி அமைக்க முடியும் என்றால், அவர்கள் ஏன் ஏழ்மையில் இருக்க வேண்டும்? We are beyond all these எங்களுடைய பிரார்த்தனையினால் கிரகங்களுடைய ஆளுகையைக் கூட எங்களால் மாற்ற முடியும்.”

About The Author