பாபா பதில்கள்

மகான் புதிரல்ல! புனிதம்!

"எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரியாய் இருக்கின்றாய்", என்று ஒரு பாடல் பாடிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் பொதுவாக யாராவது mental என்றால் ‘ஒரு மாதிரி’ என்று சொல்வார்கள். அதே வார்த்தை ie. ‘ஒரு மாதிரி’ என்றால் a model person என்றும் அர்த்தம். Role Model, மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கக் கூடியவன் என்று அர்த்தம். அதனால் ஒரு மாதிரியாய் இருக்கின்றாய் என்றால் இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். புரிந்தவர்களுக்கு ஒரு மாதிரி, புரியாதவர்களுக்கு ஒரு மாதிரி. புரிந்தவர்களுக்கு ஒரு மாதிரி என்றால், ஒரு model, ஒரு முன் உதாரணம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு cooling glass போடுகிறோம். அந்த cooling glass colour எப்படி இருக்கிறதோ, அப்படி தான் இந்த உலகம் தெரியும். கிராமங்களில் எல்லாம் சோளந்தட்டு cooling glass என்று ஒன்று உண்டு. சிகப்பு கலர் பேப்பர் ஒட்டிக் கொடுப்பார்கள். அதைப் போட்டுக் கொண்டால் எல்லாமே சிகப்பாகத் தான் தெரியும். Blue கலர் பேப்பர் என்றால் everything in blue, Green கலர் பேப்பர் என்றால் everything in green என்று அந்த மாதிரி தான் தெரியும். அதனாலே இந்த உலகத்தில் எதுவும் மாறுவதில்லை. நம்முடைய பார்வைகளை திருத்தினால் எல்லாவற்றையும் சரியாக பார்க்க முடியும். சில பேருக்கு long sight இருக்கிறது, சிலருக்கு short sight இருக்கிறது. அதற்கு சரியான கண்ணாடியை போட்டுக் கொண்டால் எல்லா பொருளும் சரியாக தெரியும். இல்லை என்றால் வேறு மாதிரியாக தெரியும். இந்த பார்வை என்பதே ஒரு delusion. 

உங்களுடைய முகமே கண்ணாடியில் பார்க்கிற பொழுது left sideலே ஒரு மாதிரியும் right sideலே ஒரு மாதிரியும் தெரியும். எந்த angleலே அவர்கள் பார்ப்பதற்கு சரியாக இருப்பார்களோ அந்த angleலே தான் camera எல்லாம் set பண்ணுவார்கள். நம்முடைய முகமே வேறு வேறு directionலே பார்க்கிற பொழுது வேறு வேறு விதமாக தெரியும்.

அதைப் போலவே ஒரு பொருளை இங்கே இருந்து பார்க்கிறோம். எல்லோரும் அதே மாதிரி தான் பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு பொருள் இருக்கிறது. அதன் மேல் ஒளிக் கற்றைகள் பாயும். அந்த பொருள் இருட்டில் இருந்தால் அந்த பொருள் இருப்பது நமக்கு தெரியாது. There may be an object. But unless light is falling on that we will not be able to see that சரி. பொருளும் இருக்கிறது, Light இருக்கிறது. நான் குருடன் என்று வைத்துக் கொள். பார்க்க முடியுமா? கண் தெரிகிறது. ஆனால் long sight/short sight என்பதை வைத்து ஒரு பொருளை பார்க்கிற கோணம் மாறுபடலாம். இன்னொரு angleலே பார்க்கலாம். ஒரு கண்ணாடி டம்ளர் இருக்கிறது. அதில் தண்ணீர் இருக்கிறது. அதில் ஒரு thermometerஐ வைக்கிறோம். வெளியில் இருந்து பார்க்கிற பொழுது உடைந்த மாதிரி தெரியும். ஆனால் விஞ்ஞானத்தில், "அது நம் பார்வையில் வருகிற பிம்ப கோளாறு", என்று சொல்கிறார்கள்.

ஒரு டம்ளரில் பாதி தண்ணீர் இருக்கும். அதை புரிந்து கொள்வதில் குழப்பம் வரலாம். ஒரு ஆளை கூப்பிட்டு கேட்டால் "அந்த டம்ளரில் பாதி காலி" என்று சொல்லலாம். இன்னொருவனை கூப்பிட்டு கேட்டால் "பாதி இருக்கிறது" என்று சொல்வான். அப்போது ஒரே விஷயம் தான். ஆனால் இரண்டு விதமாக சொல்கிறார்கள்.

ஒரு ஆள் சுவற்றின் மேல் ஒரு கவிதை எழுதினான். கவிதை எழுதி விட்டு கீழே, "Anyone who sees this can please write their criticism", என்று எழுதினான். எல்லாரும், "இது ஒரு முட்டாள் எழுதிய கவிதை. இதில் ஒன்றுமே கிடையாது. இதில் ஒன்றுமே தேறாது", என்று எல்லாம் கிறுக்கி விட்டு போனார்களாம். இவன், "என்னடா? நம்மை பற்றி ஒரு ஆள் கூட நல்லது சொல்ல மாட்டேன் என்கிறான்", என்று நினைத்தான். ஒருவன், "அங்கு எழுதி இருப்பதை எல்லாம் அழித்து விட்டு அதே கவிதையை எழுது. அதற்கு கீழே "Please write your appreciation", என்று எழுத சொன்னான். கவிதை அதே தான். ஆனால் "Please write your appreciation", என்ற உடன் எல்லோரும், "Super கவிதை. இதைப் போல யாராலும் எழுத முடியாது", என்று எழுதினார்கள். Our mind is such a pseudo. பாசாங்கு பிடித்தது. ஒரு பொருளை accept பண்ண வேண்டும் என்றால் அது அதற்கான காரணங்களை தேடும். ஒரு பொருளை reject பண்ண வேண்டும் என்று நினைத்தால் அது அதற்கான காரணங்களை தேடும். உனக்கு சிவசங்கர் பாபாவை பிடிக்கும் என்றால் அதற்கான காரணங்களை தேடுவாய். என்னை பிடிக்கவில்லை என்றால் என்னை குப்பை கூடையில் போடுவதற்கு என்னவெல்லாம் காரணங்கள் கிடைக்கும் என்று அது மட்டும் தான் உன்னுடைய mindலே வரும். You will reject anything or accept anything. இது எல்லாம் தான் மனித மனங்களினுடைய சேஷ்டைகள். So இந்த உலகத்தை பற்றிய நம்முடைய பார்வையும் பொய், நம்முடைய எண்ணங்களும் பொய், நாம் கேட்கிற விஷயங்களும் பொய். எல்லாமே பொய் தான். எதுவுமே நிஜம் கிடையாது.

அதனால் சிவசங்கர் பாபா ஒரு மாதிரி என்பதை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். பிடித்தவன் ஒரு மாதிரி சொல்வான், பிடிக்காதவன் ஒரு மாதிரி சொல்லுவான். என்னை பிடிக்கிறவன், "பாருடா. அவர் காவி கட்டவில்லை. தாடி வைக்கவில்லை. நம்மை போலவே இருக்கிறார்", என்று எல்லாம் சொல்லுவான். பிடிக்காதவன், "இவர் எல்லாம் ஒரு சாமியாரா? பைஜாமா போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்", என்று சொல்லுவான். ஒரே விஷயத்தை இரண்டு angleலே இரண்டு பேர் பார்க்கிறார்கள் பாரு. ஒரு சிலர், "சாமி என்றால் மடியாக ஆசாரமாக இருக்க வேண்டும். இவர் எல்லோரையும் தொடுகிறார். எல்லோரும் இவரை தொடுகிறார்", என்று சொல்லலாம். இன்னொருவன், "மிகவும் accessibleஆக இருக்கிறார். Friend மாதிரி தோளில் கை போட்டு பேசுகிறார்", என்று சொல்லுவான். இது ஒரு பார்வை. So we can’t judge people. External Attributesஐ வைத்துக் கொண்டு நாம் யாரையாவது எடை போட்டால் அது தவறாக தான் இருக்கும்.

ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஒருவன் பால் குடித்துக் கொண்டிருப்பான். அத பனை மரம் என்பதினாலே அவன் கள்ளு குடிக்கிறான் என்று எல்லாம் நீ நினைக்கலாம். அப்படி நீ நினைப்பதை அவனால் மாற்ற முடியாது. பல விஷயங்கள் அப்படி தான்.

ஒரு பெண் வேலைக்கு போகிறாள். அவள் சீக்கிரம் வீட்டிற்கு வந்து, பசங்களை படிக்க வைக்க வேண்டும், எழுத வைக்க வேண்டும். அவள் கூட வேலை செய்பவரிடம், "நீங்கள் போகிற வழியில் என்னை வீட்டில் விட்டு விட்டு போக முடியுமா?", என்று கேட்பாள். சீக்கிரம் வீட்டிற்கு போய் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவளுடைய nobility. அதைப் பார்த்து அந்த தெருவில் இருக்கிற மற்ற பெண்கள், "பார்த்தாயா? கண்டவனுடன் வந்து இறங்குகிறாள்", என்று சொல்லுவாள். அவளுடைய nobilityஐ அவர்கள் தங்களுடைய பார்வையினால் filthyயாக மாற்றி விடுகிறார்கள். எது நிஜம் என்பது பெருமாளுக்கு மட்டும் தான் தெரியும். உனக்கும் பெருமாளுக்கும் மட்டும் தான் தெரியும். வேறு யார் சொன்னாலும் அது சரியில்லை. இந்த உலகத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்கு இது தான் காரணம். நமக்கென்று ஒரு பார்வை வைத்திருக்கிறோம். அந்த பார்வைக்கு பிடித்திருக்கிற அல்லது புரிபடுகிற விஷயங்களை நாம் ஒரு மாதிரி பார்க்கிறோம். இல்லை என்றால் வேறு மாதிரி பார்க்கிறோம்.

உனக்கு சிவசங்கர் பாபாவை புரிந்து கொள்ள வேண்டும் என்று வைத்துக் கொள். நீ non-biasedஆக இருக்க வேண்டும். அப்பொழுது உனக்கு என்னை பற்றி ஒரு judgement இருக்க கூடாது. ஒரு notebookல் புதிதாக எழுத வேண்டும். ஏற்கனவே எழுதி இருப்பதை நீ மாற்ற வேண்டும் என்று நினைத்தால் முதலில் eraser வைத்து தேய்த்து பார்ப்பாய். அதற்கு பிறகு எச்சில் வைத்து தேய்த்து பார்ப்பாய். கிழிந்து விடும். அதனால் ஏற்கனவே எழுதியதை அழிப்பது மிகவும் கஷ்டம் Whereas to write in a new note book is easier. என்னை பார்க்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்று உனக்கு உண்மையாகவே idea இருந்தால், start, and keep observing me.

புத்தர் உயிருடன் இருந்த காலத்தில் ஒருவன் அவரிடம் போனான். அவரிடம் போய், "எனக்கு உன்னிடம் நிறைய கேள்வி கேட்க வேண்டும்", என்று சொன்னான். புத்தர், "நீ என்னிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். ஒரேயொரு condition. ஒரு வருடத்திற்கு என்னை எந்த கேள்வியும் கேட்க கூடாது. காலையில் இருந்து நான் என்ன சாப்பிட்டாலும் உனக்கு கொடுப்பேன், நான் எங்கு தூங்கினாலும் நீயும் தூங்கலாம். என்னை யாராவது பார்க்க வந்தால் அவர்களிடம் நான் என்ன பேசுகிறேன் என்று கூட நீ கேட்கலாம். You have all liberties. ஆனால் என்னை ஒரு கேள்வியும் கேட்க கூடாது. ஒரு வருடம் கழித்து நீ என்னை என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்", என்று சொன்னார். ஒரு வருடம் கழித்து புத்தர் அவனை கூப்பிட்டு, "இப்பொழுது நீ என்னை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்", என்று சொன்னார். அவன் எதுவும் கேட்காமல் புத்தருடைய தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். அப்பொழுது பக்கத்து மரத்தில் இருந்து ஒருவன் சிரித்தான். இவன், "யாருடா சிரிக்கிறது?", என்று பார்த்தான். சிரித்தவன், "புத்தரிடம் கேள்வி கேட்க வந்தாயா?", என்று கேட்டான். "ஆமாம், உங்களுக்கு எப்படி தெரியும்?", என்று கேட்க. "நானும் உன்னைப் போல் தான் புத்தரிடம் கேள்வி கேட்க வந்து விட்டு இப்பொழுது மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறேன்", என்று சொன்னானாம்.

So, ஒரு மகானை உண்மையாகவே நீ புரிந்து கொள்ள விரும்பினால் தூரத்தில் இருந்து பார்க்க கூடாது. கிட்டத்தில் பார்க்க வேண்டும். அவன் கூடவே இரு. அவன் என்ன செய்கிறான் என்று பார். "ஏன் இப்படி செய்கிறார்? ஏன் இப்படி செய்யவில்லை", என்று அறிவினால் ஆராய்ச்சி பண்ணு. உனக்கு புரியவில்லை என்றால், "ஏன் இப்படி பண்ணுகிறீர்கள்?", என்று அவரிடமே கேளு. அவர் செய்வதற்கெல்லாம் அவருக்கென்று ஒரு காரண காரியம் வைத்திருப்பார். அது என்னவென்று நீ கேட்டால் தானே அவர் சொல்வார்?. "நான் இப்படி dress பண்ணுவதற்கு இது தான் காரணம். இப்படி நடந்து கொள்வதற்கு இது தான் காரணம்", என்று கையில் டமாரம் வைத்துக் கொண்டு ஊர் பூரா சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? If you really want to understand without
attributing any external identities, உனக்கு என்ன புரிகிறது? என்ன புரியவில்லை, என்று நேரடியாகவே கேட்டு விடு. Then you will understand Him one step further. Make efforts to understand Him step by step, and you will also evolve.

என்னை புரிந்து கொள்ளுங்கள். உங்களை பண்படுத்திக் கொள்ளுங்கள்.

About The Author