பாபா பதில்கள்

ஆத்மாக்கள் உலகம் என்ற சிறைச்சாலையில் தன்னுடைய கர்மாக்களுக்கான பலன்களை அனுபவிப்பதற்காக அனுப்பப்படுகிறார்கள். ஒழுக்கமான கைதியாக சாமி கும்பிட்டுக் கொண்டு, பக்தியாக எந்தத் தப்பும் செய்யாமல், யோக்கியமாக இருந்தால் கடவுள் என்ற ஜெயிலர் அவர்களுடைய கர்மாவை தள்ளுபடி பண்ணிவிடுவார். சீக்கிரமாக விடுதலை வாங்கி கொடுத்துடுவார். ஏழு வருஷம் கேது தசையில் கஷ்டப்படுகிறாய் என்றால் நீ ஏழு மாதத்திலே வெளியே வந்துவிடலாம். உனக்கு நிறைய பக்குவம் இருந்தது என்றால் ஏழே நாட்களில் வந்துவிடலாம். அல்லது ஏழு மணிநேரத்திற்குள் கஷ்டத்தை அனுபவித்துவிட்டு வந்துவிடலாம். பதினெட்டு வருஷம் உன்னை ராகுதசையில் போட்டிருக்கிறார்கள். அது ஆயுள் தண்டனை மாதிரி. உனக்கு புத்திசாலித்தனம் இருந்தால் அதிலிருந்து பதினெட்டே நாட்களில் தப்பித்து வந்துவிடலாம். அல்லது ஏழரை வருஷம் சனீஸ்வர பகவான் ஆட்சி. உன்னால் தப்பிக்க முடியும். ஆனால் நல்லவனாக இருக்க வேண்டும். பக்தியுடன் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

நீ முரண்டு பிடிக்கிற கைதி. ‘எனக்கென்ன சாமி?’ என்று சொல்கிறாய். சாராயம் குடிக்கிறாய். இன்னும் நான்கு பேரை அடிக்கிறாய். அதனால் என்ன ஆகிறது? உன்னுடைய தண்டனைக் காலம் வளர்ந்து கொண்டே போகிறது. ஆயுட்காலம் முடிகிற நிலை வந்துவிட்டால் இந்த ஜன்மத்திலேயே கழித்து முடிக்கப்படாமல் விட்ட கர்மா அடுத்த ஜன்மத்திற்கும் தொடர்கிறது. பிறவித் தொடர் இப்படித்தான் சங்கிலிபோல் நீண்டு கொண்டே போகிறது.

About The Author