பாபா பதில்கள்

இராமர், கிருஷ்ணர் காலத்திற்கு முன்பே வேதம் என்பது பழமையானதாக இருந்தது. ஆனால் இன்றைக்கும் பூஜைக்கும் யாகத்திற்கும் வேதத்தை தான் உபயோகப் படுத்துகிறோம். இராமரையோ கிருஷ்ணரையோ அல்ல. இராமர், கிருஷ்ணர் படத்தையோ இல்லை சிலா ரூபத்தை வைத்துக் கொண்டு பூஜை, யாகம் செய்வது சரி ஆகுமா?

It depends on our beliefs. சாமியை பற்றி சொல்கிற போது, "ஆகமங்கள் ஆகி நின்று அன்னிப்பான் போற்றி!", என்று சொல்கிறோம். அப்போது சாமியையே தான் ஆகமங்கள் என்று சொல்கிறோம். இன்னொரு நேரத்திலே சொல்கிற போது, "சங்கரா! சாமவேதி!", என்று சொல்கிறோம். சங்கரனும் சாமவேதமும் ஒன்று என்று சொல்கிறோம். பெருமாளை பற்றி சொல்கிற போது, "யக்ஞேச! யக்ஞ மதுசூதன வாசுதேவ!", என்று சொல்கிறோம். "அவன் தான் யக்ஞேசனாக இருக்கிறான். யக்ஞங்களுடைய பலனை பெறுகிறவனாக இருக்கிறான்", என்கிற அர்த்தத்திலே சொல்கிறோம். So if you want to see in a particular way, it is your choice. Either you see this or you see that. Both are one and the same . "வேதாகம ஞான விநோதகனும் நீயலையோ?". "வேத, ஆகம, ஞான, விநோதகன், எல்லாமே நீ தான்", என்று முருகனை பற்றி கந்தர் அனுபூதியிலே சொல்லப்படுகிறது. தியாகபிரம்மம் போன்றவர்கள் கூட, "சாம வேத ஸ்வரூபமாக இருக்கிறாய்", என்று எல்லாம் சாமியை பற்றி பாடி இருக்கிறார்கள். அதனாலே, it is your own acceptance and it is your own concept. Both are one and the same. They are not different.

About The Author