வெள்ளைமலர் அரும்பாக மலர்வதற்குக் காத்திருக்கும்
வேளையிலும் ஆசை வளரும்!
மெல்லிதழ்கள் வழியாக வருகின்ற வாசத்தில்
மன்மதனும் மேவி வருவான்!
அன்னைசுகம் பிள்ளைக்கு ஆனாலும் கணவன்முன்
அவள்தானே காதல் தலைவி!
சன்னதியில் தூய்மையினைத் தருகின்ற மல்லிகையும்
சரசத்தில் காமஎழிலி !
காதலியின் கருங்குழலில் கொத்தாக சேர்ந்திருந்து
கற்பனையைக் கூட்டி வளர்க்கும்!
மீதியவள் விழிசொல்ல மற்றிந்த மல்லிகையின்
மென்மைமிகு வாசம் உரைக்கும் !
காதலியின் நெஞ்சத்தை காளையவன் மஞ்சத்தில்
காண்கின்ற போது சிரிக்கும்!
பாதிமலர் கட்டிலிலே மீதிமலர் மேனியிலே
கவிதையென இரவு மணக்கும்!



மல்லிகையின் மணம் கவிதையிலும் வீசுகின்றது!
முதல் இரு வரிகளில் மல்லிகையின் இயல்பு
அடுத்த இரு வரிகளில் மல்லிகையின் செய்கை
இரண்டையும் பதித்திருக்கும் பாஙுகு பாரட்டுக்குரியது.
சிம்ப்ல்ய் சுபெர்ப்
பாலகிருஷ்ணண்,சங்கர், ப்ரபு,
உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி.
அரவிந்த் சந்திரா