நவக்கிரகங்கள் (24)

நவகிரக ஸ்தோத்ர கிருதிகள்

சுக்கிரன்

பல்லவி

ஸ்ரீ சுக்ர பவந்தம் சிந்தயாமி
சந்ததம் ஸக்ல தத்வக்ஞம்

அனுபல்லவி

ஹே சுக்ர பகவான் மாம் ஆஸு
பால்ய வ்ருஷ துலாதீஸ தைத்ய ஹிதோ தேஸ
கேசவ கடாக்ஷக நேத்ரம் கிரீடதரம் தவள காத்ரம்

சரணம்

விம்ஸதி வத்ஸரோடு தஸா விபாக மஷ்ட வர்க்கம்
கவும் களத்ர காரகம் ரவி நிர்ஜர குரு வைரினம்
நவாமஸ ஹோராத் ரேக்காணாதி
வர்க்கொத்த மாவஸர ஸமயே
வர்ரோச்ச நீச ஸ்வக்ஷேத்ர வர கேந்தர மூல த்ரிகோண
த்ரிம்ஸாம்ஸ ஷஷ்ட்யாம் ஸை ராவதாம்ஸ பாரிஜாதாம்ஸ
கோபுராம்ஸ ராஜயோக காராக
ராஜ்ய ப்ரதம் குரு குஹ முதம்

கருத்துரை

சகல உண்மைகளையும் அறிந்த ஸ்ரீ சுக்ர பகவானை எப்போழுதும் தியானிக்கிறேன். ரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதியும், அசுர குருவும், விஷ்ணுவின் கடாக்ஷத்தால் ஒரு கண்ணை உடையவரும், பெண் மேனியும், கிரீடமும் தரித்த சுக்ர பகவான் என்னைக் காப்பாற்றட்டும், உடு தசையில் 20 வருடம் உடையவரும், பண்டிதரும்,களத்ர பாவாதி பதியும், சூரியன், குரு, இவர்களுக்கு விரோதியும், நவாம்சம், மூலத் திரிகோணம், இவைகளில் வக்ரம், நீசம், ஸ்வக்ஷேத்ரம், கேந்தரம், த்ரிம்சாம்சம், ஷஷ்டாம்சம், பாரிஜாதாமசம், கோபுராம்சம் இவைகளைப் பெற்றால் ராஜ யோகம் அளிப்பவரும், ராஜ பதவியை அளிப்பவரும், குரு குசனுக்கு சந்தோஷம் அளிப்பவருமான ஸ்ரீ சுக்ர பகவானுக்கு நமஸ்காரம்!

சனி

பல்லவி

திவாகர தனுஜம் சனைச்சரம்
தீரதரம் ஸந்தம் சிந்தயேஹம்

அனுபல்லவி

பவாம்பு நிதேள நிமக்ன ஜனானாம்
பயங்கர மிதிக்ருர பலடம்
பவா னீஸ கடாக்ஷ பாத்ர பூத
பக்தி மதாம் அதிசய சுப பலதம்

சரணம்

காளாஞ்சன காந்தி யுக்த தேஹம்
கால ஸஹொதரம் காக வாஹம்
நீலாம் சுக புஷ்ப மாலா வ்ருதம்
நீல ரத்னா பூஷணாலங்க்ருதம்
மாலினீ வினுத குருகுஹ முதிதம்
மகர கும்ப ராசி நாதம்
தில தைல மிஸ்ரிதான்ன தீப ப்ரியம்
தயா ஸுதா ஸாகரம் நிர்பயம்
கலா தண்ட பரிபீடித ஜானும்
காமிதார்த்த பலத காமதேனும்
கால சக்ர பேத சித்ர பானும்
கல்பித சாயா தேவி ஸுனும்

கருத்துரை

சூர்ய குமாரரும், ராசிகளில் மெதுவாக சஞ்சரிப்பவரும், சம்சாரக் கடலில் முழ்கியாவர்களுக்கு பயமளிப்பவரும், சிவா கடாக்ஷம் பெற்றவர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை அளிப்பவரும், மை போன்ற கரு மேனி உடையவரும், யமனுக்கு சகோதரரும், காக வாகனம் உடையவரும், நீல வர்ண முல்லா புஷ்பம், ரத்னமிழைத்த ஆபரணங்கள் இவைகளை உடையவரும், மாலின் என்ற மந்திரத்தால் அடையக் கூடியவரும், மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதியும், நல்லெண்ணெய் , தீபம் எள்ளன்னம், இவைகளில் பிரியமுடையவரும், தயை உடையவரும், பயமற்றவரும், கால சக்கரத்தால் அடிபட்ட முழங் காலை உடையவரும், வரமளிப்பதில் காலதேனுக்கு சமமானவரும், சாயாதேவியின் புத்திரருமான சனீஸ்வரனை எப்போதும் தியானிக்கிறேன்.

ராகு

பல்லவி

ஸ்மாரம் யஹம் ஸதா ராஹும்
சூர்ய சந்தர வீக்ஷ்யம் விக்ருத தேஹம்

அனுபல்லவி

ஸு ரா ஸுரம் ரோக கரம் ஸர்பாதி பீதி ஹரம்
ஸுர் பாஸன சுக கரம் ஸுலாயுத தர கரம்

சரணம்

காராள வட்டம் கடினம் கயானார்ண கருனார்த்ரா பாங்கம்
சதுர்புஜம் கற்க கேடாடி தரணம் சர்மாடி நீல வஸ்த்ரம்
கோமேதகா பரணம் ஸனி ஸுக்ர
மித்ர குருகுச ஸந்தோஷ கரணம்

கருத்துரை

ஸுர்ய சந்திரர்களுடன் க்ரஹண காலத்தில் புலப்படுபவரும், துண்டித்த உடலை உடையவரும், தேவ, அசுர இவ்விரண்டும் குணங்களை உடையவரும், வியாதியையும், சர்ப்பபயத்தையும் போக்கடிப்பவரும், உக்ரமானவரும், ‘கயான’ என்று தொடங்கும் வேத மந்திரத்தால் அடையக் கூடியவரும், கருணை உடைய கண்களுடன், கத்தி, கேடயம் முதலியவைகளைத் தரித்தும் நான்கு கரங்களுடன், கோமேதக ரத்னத்தை அணிந்து சனி, சுக்ரர்களுடன் நட்பு உடையவரும். குருகுஹருக்கு சந்தோஷம் அளிப்பவருமான ராஹு பகவானை எப்பொழுதும் தியானிக்கிறேன்.

கேது

பல்லவி

மஹாஸுரம் கேது மஹம்
பஜாமி சாயா க்ரஹ வரம்

அனுபல்லவி

மகா விசித்ர மகுட தரம்
மங்கள வஸ்ராடி தரம்
நர பீட ஸ்திகம் ஸுகம்
நவக்ரஹ யுதம் ஸுகம்

சரணம்

கேதும் க்ருண்வன் மந்த்ரிணம்
கரோட நிதி ஜைமினம்
குளுத்தாதி பக்ஷணம்
கோண த்வஜ பதாகினம்
குருகுஹ சாமர பரணம்
குண தோஷ சிடா பரணம்
க்ரஹணாதி கார்ய காரணம்
கரஹா பஸவ்ய ஸஞ்சாரிணம்

கருத்துரை

அசுரர்களில் சிறந்தவரும், விசித்ரமான மகுடமும், மஞ்சள் ஆடையும் தரிப்பவரும், மனித உடலை ஸுகாசனமாகக் கொண்டுவரும், நவகிரகங்களில் ஒன்றான ராஹுவின் நண்பரும், ‘கேதும் க்ருண்வன்’ என்ற மந்திரத்தால் அடையக்கூடியவரும். அதிக கோபமுள்ளவரும், ஜைமினி வம்சத்தில் பிறந்தவரும், கொள்ளு முதலிவைகளை உண்பவரும், கோண வடிவமான கோடியை உடையவரும்,சுப்ரமண்யருக்கு சாமரம் தாங்குபவரும், கிரகங்கள் சுற்றி வருவதில் அப்ரதக்ஷிணமாகச் சுற்றுபவருமான கேது பகவானை ஸ்தோத்ரம் செய்கிறேன்.

About The Author