பாபா பதில்கள்

சத்சங்கத்திலே பாபாவின் அருளுரையை கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, மனது எங்கேயோ பறந்து விடுகிறது. அதற்காகவே பாபாவின் முன் உட்கார்ந்து இருக்கிறேன். சத்சங்கம் முடிந்த பின் கேட்டதும் மறந்து விடுகிறது. இந்த இடத்திலே மனம் லயிக்க என்ன செய்ய வேண்டும்?

Siva Shankar Babaஏதோ to a certain extent some retention, ஒரு பத்து பாயிண்ட் கேட்டால், ஒரு பாயிண்ட்டாவது நிற்க வேண்டும் இல்லையா? அதுவே ஒரு பெரிய instead of not achieving anything, achieving at least this is better. And may be you may not have that type of a crazy attachment for the knowledge. இந்த மாதிரி விஷயங்களிலே விசாரம் இல்லாமல் போகலாம். ஆனால் to some extent, பாட்டு கேட்கிறோம். peaceful atmosphere லே உட்கார்ந்து இருக்கிறோம். இவ்வளவு பேர் ரொம்ப positive ஆக இருக்கிறார்கள். அந்த energyனுடைய sharing நமக்கும் கிடைக்கும் even if you want or not. இந்த இடத்திலே என்ன குறைச்சல்? ஒன்றுமே இல்லை. இப்போது எந்தக் கோவிலுக்கு போனாலும் சந்தைக் கடை மாதிரி தான் இருக்கிறது. நம்முடைய கோவில் எவ்வளவு நன்றாக இருக்கிறது. இல்லையா? எந்தக் கோவிலிலேயாவது ஒரு peace of mind இருக்கிறதா? இருளோடிப் போய் எல்லாமே commercial ஆகவும், ஒரு சந்தோஷத்தை கொடுக்காத மாதிரியும் தான் இருக்கிறது. எல்லாக் கோவிலிலேயுமா உனக்கு peace of mind கிடைக்கிறது? ஏதோ ஒரு 5% கோவிலிலே கிடைக்கும். 95% கோவிலிலே ஒன்றும் கிடைப்பது இல்லை. அந்த வகையிலே பார்க்கிற போது, நம்முடைய system of our temple construction, the type of sharing the joy and love is very unique. அனைவரும் உட்கார்ந்து கொண்டு இறைவனை தரிசிக்கும்படியான அமைப்பு. இந்த இடத்திலே ஒரு peace, இந்த bliss இருக்கிறது, பாரு. So, விஷய ஞானம் இல்லாவிட்டால் என்ன? Even sharing of energy, sharing of peace is very good. What is wrong about it?
அதனாலே எதுவுமே செய்யாமல் இருப்பதை விட, எதையாவது செய்வது நல்லது. Gradual ஆக வரும். கொஞ்சம் கொஞ்சமாக டேஸ்ட் வரும்.

About The Author