இராசிபலன்கள் (17-02-2014 முதல் 23-022-2014 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது! சகோதர, சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற்று அவர்களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும்! ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், திரைத்துறை, நாடகத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், கார், லாரி போன்ற வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவது நல்லதாகும். அலுவலகப் பணியாளர்களுக்கு நினைத்த இடத்துக்குப் பணியிட மாற்றம் ஏற்படும். வேற்று மதத்தவர்களிடம் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பொதுத் தொண்டு செய்பவர்களுக்கு நல்ல பெயர், புகழ் ஏற்படும் காலமாகும். பிரிந்து போன கணவன் – மனைவி மீண்டும் இணைவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். மூலம், நீர் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில நன்மைகளை அடையலாம்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், ஆலயப் பணி புரிபவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், அசைவப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், ஏஜன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள், அணு ஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள், விமானப் பணியாளர்கள் ஆகியோருக்கு நற்பலன்களைத் தரும் காலமாகும். திருட்டுப் போன பொருட்கள் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வரக்கூடும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பழகி வருதல் நல்லது! தந்தையின் உடல்நிலையில், குறிப்பாகக் கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! புதிய நண்பர்களின் சேர்க்கையால் காரணமற்ற பிரச்சினைகள் வந்து சேரக் கூடிய காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும்! பொருளாதார நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் மிக நன்றாக இருக்கும். உடல்நிலைப் பாதிப்பால் வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் நண்பர்கள், உறவினர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். நீண்ட பயணங்களை மேற்கொள்ள முயற்சிப்பீர்கள். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- கணபதி வழிபாடும் செவ்வாடை தானமும் செய்து வருக!

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். விருந்தினர்களின் வரவால் சிறிய மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். பந்தயம், பரிசுச்சீட்டு மூலம் பணம், பொருள் கிடைக்கலாம். சீதளம், ஒவ்வாமை, வாயுத் தொல்லை, வயிற்றுத் தொல்லை போன்றவை வந்து போகும். புதிய சொத்துக்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். கலைத்துறையினர் பரிசும் பாராட்டுகளும் பெறுவார்கள். தந்தை – மகன் உறவுகளில் சிறிய பிரச்சினைகள் வந்து போகும். விபரீதமான எண்ணங்களையும், தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையையும் தவிர்த்தல் நல்லது. சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக் கூடிய காலமாகும். கடல் வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு, கடல்வாழ்பொருள் விற்பனையாளர்கள், திரவப் பொருள் வியாபாரிகள், பூஜைப்பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், தாய் – சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள், ரத்தின வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் – பேராசிரியர்கள் ஆகியோர் மிகவும் நற்பலன்களை அடைவர். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களில் பிரச்சினைகள் தீர்ந்து தொழிலைத் தொடங்குவீர்கள். தாயின் உடல் நிலையில் நோய்கள் குறையக் கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பெண்களால் தொலைவில் இருந்து நற்செய்திகளும் பொருள் வரத்தும் உண்டாகும். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! புதிய வீடு, நில புலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்! அரசு வழக்கு விஷயங்களில், எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். காதல் விஷயங்களில் அநுகூலமான சில செய்திகள் வந்து சேரும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரக் கூடிய காலமாகும். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த கடன், உதவித் தொகை போன்றவை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நிம்மதி அடைவீர்கள். மகான்களின் தரிசனத்திற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிருங்கள்! தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், கழிவுப் பொருட்களை வாங்குவோர் – விற்போர், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அசைவப் பொருள் வியாபாரிகள், வட்டித் தொழில், தரகு, ஏஜன்சி, கமிஷன் போன்ற தொழில் செய்பவர்கள், பழைய இரும்பு, பழைய பேப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர், அம்மன் வழிபாடு செய்து கருப்பு ஆடை தானம் செய்து வருக!

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் ஏமாற்றம் அடையாமல் இருங்கள்! வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயங்கள் வந்து சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளி போடுதல் நல்லதாகும். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவுகள் வந்து சேரலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட சம்பந்தமான விஷயங்களில் மிகவும் கவனமாக இருங்கள்! புதிய வீடு மாறுதல், தொழிற்சாலையை இடமாற்றம் செய்தல் போன்ற திட்டங்கள் நிறைவேறும். திருட்டுப் போன பொருட்கள் திரும்பி வீடு வந்து சேரும். புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவதைத் தவிருங்கள்! விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் நல்ல மதிப்பெண்களையும் பரிசு, பாராட்டு ஆகியவற்றையும் பெறுவார்கள். மனைவி, மனைவி வழிச் சொந்த பந்தங்கள் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். நெருப்பு சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், ஆகியோர் நற்பலன் அடைவர். அலுவலகப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் கண்டிப்பும், இடமாற்றமும் ஏற்படலாம். உழவர்களுக்கு விவசாயம் நன்றாகப் பலிதமாகும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்!

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடும் காவி ஆடை தானமும் செய்து வருக!

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருளையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிருங்கள்! குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகளால் சில ஆதாயங்களை அடைவீர்கள். பூஜைப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், தின்பண்ட வியாபாரிகள், நறுமணப் பொருள் சார்ந்த துறையினர், கணினித்துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மிகவும் நல்ல பலன்களை அடைவர். செய்யும் தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது! குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகச் சுற்றுலாக்களை மேற்கொள்வதன் மூலம் பொருட்செலவு உண்டாகும். குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான விஷயத்தில் சச்சரவுகள் வந்து போகும். விருந்தினர்களின் வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்விகச் சொத்து போன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். அரசு வழக்கு போன்ற விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான முடிவுகள் வந்து சேரும். நீண்ட காலமாக வராத கடன், கொடுத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை காவல்துறையினர் உதவியால் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடும் மஞ்சள் ஆடை தானமும் செய்து வருக!

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நோய்களுக்குப் புதிய முறை மருத்துவத்தின் மூலமாக நல்ல குணம் கிடைக்கும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைவதன் மூலம் மன நிறைவடைவீர்கள். அச்சுத் தொழில் சார்ந்தவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், வழக்குரைஞர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், இசையமைப்பாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். குலதெய்வ வழிபாடு செய்து வரும் எண்ணம் நிறைவேறும். சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை! செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வந்து போக வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் திடீர் தன வரவுகள் உண்டாகும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகை வந்து சேரச் சற்றுத் தாமதம் ஆகலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் உதவியால் மணவாழ்வு கைகூடும். நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றில் கவனத்துடன் இருத்தல் நல்லது! பிள்ளைகளால் சில பொருட்செலவுகளும், வீண் பிரச்சினைகளும் வந்து போகும்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடும் பச்சை ஆடை தானமும் செய்து வருக!

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். மூளை, நரம்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டாம்! தொழிலில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது! உற்றார் உறவினர் வருகையால் பணச் செலவு உண்டாகும். புதுப்பித்துக் கட்டுவதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. பூஜைப்பொருள் வியாபாரிகள், மனநலக் காப்பகம் நடத்துபவர்கள், தாய் – சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள், உப்பு, உர வியாபாரிகள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். காதல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லதாகும்! கண்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்! பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். பிரிந்து போன உறவுகளுடன் திரும்பவும் ஒன்று சேருவதற்கான காலமாகும். புதிய வீடு, நிலம் வாங்க நீண்ட காலமாகப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

தனுசு:-

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகளால் பொருட்செலவுகள் வந்த போதிலும் அவர்களால் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வயிறு, முதுகு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். அரசியல்வாதிகள் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. புனிதப் பயணம் சென்று வரும் எண்ணங்கள் நிறைவேறும். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட்செலவுகள் ஏற்படும். இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பழைய இரும்புப் பொருள் வியாபாரிகள், எண்ணெய், பல சரக்கு போன்ற வியாபாரிகள், கடைநிலை ஊழியர்கள், கழிவுப் பொருட்களை வாங்குபவர்கள், உர வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். அரசியல்வாதிகளிடம் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவி உறவுகளில் சிற்சில பிரச்சினைகள் வந்து போகும். கூட்டுத் தொழிலில் பங்காளிகளுடன் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து தீரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும், பாராட்டுகளையும் பெறுவார்கள். சொத்து சம்பந்தமான விஷயங்களில் பெரிய மனிதர்களின் தலையீட்டால் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். விபரீத எண்ணங்களால் நிம்மதியை இழக்காதிருங்கள்!

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடும் நீல ஆடை தானமும் செய்து வருக!

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சகோதரர்களால் நிம்மதி குறைந்தாலும் அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய வழக்கறிஞர்களை நாடுவதன் மூலமாகத் தீராத வழக்குகளைத் தீர்ப்பதில் நல்ல பலன் அடைய வாய்ப்புகள் உள்ளன. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் மாறிப் பொருட்செலவுகள் குறைய வாய்ப்புகள் உள்ளன. வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். திரும்பி வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கிடைக்கும். உணவகத் தொழில் செய்பவர்கள், சிற்றுண்டி விடுதி நடத்துபவர்கள், காவல்துறை, ராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள், எரிபொருள் வியாபாரிகள், மின்சாரப் பொருள் வியாபாரிகள், மின்வாரியத்துறை சார்ந்தவர்கள், கேஸ் வெல்டிங் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். நீண்ட பயணங்களை மேற்கொள்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்கலாம். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- துர்க்கை வழிபாடும் செவ்வாடை தானமும் செய்து வருக!

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பழைய பொருள் வியாபாரிகள், கமிஷன், ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், பழைய இரும்பு, தகரம் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பொதுப் பணிகளைச் செய்பவர்கள் கவனத்துடன் பணி ஆற்றுவதால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கலாம். வீடு, நிலம் போன்றவற்றின் மூலம் புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி அடையலாம். விவசாயம் சுமாராகக் காணப்படும். மற்றவர்களுக்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷயத்தில் சற்றுக் கவனமாக நடந்து கொள்ளுங்கள்! பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உற்றார் உறவினர்களின் வரவால் நிம்மதி குறைவதோடு, வீண் பொருட்செலவுகளும் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பொருள் வரத்தும் உண்டாகும். அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்திருந்த ஆதரவுகள் கிடைக்கும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூர்விகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த நாட்பட்ட பிரச்சினைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கும். புனிதப் பயணம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி அடையலாம்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் மற்றும் அம்மன் வழிபாடும் கருப்பு ஆடை தானமும் செய்து வருக!

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நகை வியாபாரிகள் எதிர்பாராத லாபம் அடைவர். வெகு காலமாகப் பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் தீர்ந்து நிம்மதி ஏற்படும். நெருப்பு, மின்சாரம், இராணுவம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், மின்சாரப் பொருள் விற்பனையாளர்கள், காவல்துறையினர், பங்கு வர்த்தகம் போன்ற தொழில்கள் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். சுப நிகழ்ச்சிகளுக்காக நீண்ட பயணமும் வீண் பொருட்செலவுகளும் உண்டாகும். காதல் விஷயங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து உறவுகள் வலுப்பெறும். கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். அரசு வழக்கு விஷயத்தில் சாதகமான தீர்ப்புகள் வந்து சேரும். நீண்ட பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும்! தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. பயணத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாக விபத்துக்களைத் தவிர்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வித்துறையில் பரிசும் பாராட்டுகளும் பெற வாய்ப்புகள் உள்ளன. தேவையான பொருளாதாரம் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- துர்க்கை வழிபாடும் சிகப்பு ஆடை தானமும் செய்து வருக!

*****************

Gnanayohi.Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author