மடை திறந்து… (29)

என்னப்பா, எல்லாரும் நலம்தானே… நாங்களும் மிக்க நலமே!

சென்னையில சொந்தங்களோட கொண்டாடின தீபாவளி ரொம்ப சுகமா இருந்தது. (நிறைய வேலையா இருந்தாலும்). இந்த முறை என்னோட பெற்றோர், மாமனார், நாத்தனார் குடும்பம், மச்சினர் குடும்பம் எல்லாரும் ஒரு Guest houseல ஒண்ணா தங்கி பண்டிகையைக் கொண்டாடினோம். தவிர அண்ணன், அக்கா, தங்கை எல்லாரும் குடும்பதோட வந்து வந்து போனாங்க… ஆனா பாருங்க தீபாவளிக்கு புதுசு உடுத்த வாய்க்கலை. எல்லாரையும் கவனிச்சு அனுப்பவே நேரம் சரியா இருந்தது. ஆனா போன வருஷம் என் மேல அதீத அன்பு கொண்ட ஒரு சகோதரர் எடுத்துக் கொடுத்த காட்டன் புடவையை எதிர்பாராத விதமா கட்ட அமைஞ்சது… அவரோட அன்பான விருப்பத்தினால நடந்திருக்குமா இருக்கும்…ஆனா அந்த சகோதரரை பார்க்க வாய்ப்பில்லாமல் போயிடுச்சு இந்த முறை. ஆனா அதுக்கு அவர் கோவிச்சுக்கலை. அதுதானே உண்மையான அன்பு?

முதல் முறையா ராஜுவும் சம்ரட்சணாவில என்கூட தங்கினார்… அந்த அமைதியான ஆன்மீக சூழல் அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருச்சி… ஒவ்வொரு முறையும் சம்ரட்சணாவுக்குப் போகும்போதும் ஏற்பட்டிருக்கற மாற்றங்கள் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஆனா இந்த முறை விவரிக்க முடியாத அளவு பிரமிப்பு… கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள மூணு கோவிலை பெரிசு பெரிசா கட்டிட்டாங்கப்பா… கண்ணுல ஒத்திக்கலாம்… அவ்வளவும் அழகு… வாவ்! அங்கே வசிக்கறவங்க பெரிய புண்ணியம் செஞ்சிருக்கணும்… புதுக் கோவில்ல இருக்கற அம்மன் என்ன வசீகரமா புன்னகை செய்யறாங்க தெரியுமா? நேரில பார்க்கற மாதிரி இருக்கு… வாய்ப்புக் கிடைச்சா போயிட்டு வாங்க…

எனக்கு ஏதோ ஆயிடுச்சி… சம்ரட்சணால ரெண்டு முறை மைக்ல பாடினேன்!!! நினைச்சே பார்க்க முடியலை… ஏதோ நடக்குதுப்பா…

குடும்பத்தாரை எல்லாம் கூட்டிக்கிட்டு தக்ஷின் சித்ரா போயிருந்தோம். ரொம்பப் பிடிச்சிருந்தது… தக்ஷின் சித்ரா பற்றி தெரியாதவங்க இங்கே போய் மேல் விபரங்கள் தெரிஞ்சுக்கலாம்:

http://dakshinachitra.net/

அந்தக் கால வீடுகள்ல என்ன மாதிரி வேலைப்பாடுகள் இருந்திருக்குன்னு பார்த்து அசந்திட்டோம். ஒரு சாம்பிள் பாருங்க:

Dakshinchitra

கால வாரியா தமிழ் மண்ணில நடந்த ஆட்சிகளைப் பற்றிய வரைபடத்தையும் உங்ககூட நான் பகிர்ந்துக்க விரும்பறேன்:

Dakshinchitra Rulers and Dynasties of Tamilnadu

பாரம்பரியத்தை விரும்பற ஒவ்வொருத்தரும் போய் கண்டு களிக்க வேண்டிய இடம் தக்ஷின் சித்ரா.

சில வருடங்களா ஒவ்வொரு முறை இந்தியா போகும்போதும் ஜம்பு அப்பா – சுசீலா அம்மா கூட ஒரு நாளாவது தங்கிக்கிட்டிருந்தேன்… இந்த முறை அதுவும் அமையலை. அவங்களை, அவங்க வீட்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் வீடு மாதிரி என்னால சுதந்திரமா – நான் நானா இருக்க முடியும் அவங்களோட. ‘ஏன் எங்க கூட அதிக நேரம் செலவு செய்யறதில்லை?’ போன்ற உணர்வுபூர்வமான ப்ளாக்மெயில் எல்லாம் கிடையாது. அவங்க கூட ஒரு நிமிஷம் செலவு செய்தாலும் ஒரு மாசம் தங்கினாலும் அதை கொண்டாடற அவங்களோட நல்ல மனம் நான் சம்பாதிச்ச மிகப் பெரிய சொத்து… மடை திறந்து மட்டும் எப்படியாவது வாரவாரம் எழுதிடணும்கறது ஜம்பு அப்பாவோட ஒரே ஒரு வேண்டுகோள். நாலைஞ்சு வரியாவது எழுதிடணும்னு முடிவோட இருக்கேன். இந்த வார மடை திறந்து ஜம்பு அப்பா – சுசீலா அம்மாவுக்கு சமர்ப்பணம்.

அவங்க கூட நான் இருக்கற இந்தப் படத்தில கட்டிருக்கற புடவை 14 வருஷத்துக்கு முன்னால வாங்கினது. இதில ஒரு சென்டிமெண்ட் இருக்கு. சொன்னா நீங்க சோக வயலின் வாசிப்பீங்க. அதனால விட்டிறலாம். இவங்களைப் போல எனக்கு இன்னும் சில பெற்றோர்கள் உண்டு. நேரம் கிடைக்கறப்ப மேலும் பகிர்ந்துக்கறேன்.

எனக்கு ரொம்ப அறிவாளியான ஒரு நண்பர் உண்டு. எதையும் அறிவியல் பூர்வமா பார்க்கறவர். அவர் நாத்திகருமில்லை; ஆத்திகருமில்லை. அவர்கிட்டே சமீபத்தில சும்மா என்னோட அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டிருந்தேன். கரகரன்னு அவர் கண்ணில இருந்து தண்ணி கொட்டுச்சு – ‘நான் ஏன் அழறேன்னு எனக்கே தெரியலை’ன்னார்… அந்த உணர்வு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். எனக்கும் ஆன்மீகமும் இயற்கையும் இப்படிப்பட்ட கண்ணீரைக் கொடுக்கும்… நான் நினைக்கிறேன் இருட்டில இருக்கற நமக்கு ஒளி கிடைக்கும்போது நம்மோட உண்மையான சாரத்தை உணர்றோம். அந்தப் பரவசத்திலதான் அந்த அழுகை வருதுன்னு… உங்களுக்கு இந்த மாதிரி அனுபவங்கள் இருந்திருக்கா? பகிர்ந்துக்கங்களேன்… இங்கே பின்னூட்டம் வரலைன்னு காரணம் சொல்லி நிறுத்திடாதீங்க… நேயத்திலேயாவது போடுங்க:

http://groups.google.com/group/neyam

ஆரிஜின்லருந்து வந்த மின்னஞ்சலைத் தமிழ்ப்படுத்தாம இங்கே தர்றேன்:

Require Volunteers for the Care & Affection for the Orphan Children – 5th Nov 2011

Government Children’s Home for Girls is situated @ Purasawakkam, Chennai. This organization takes care of more than 200 inmates, which includes Poor / Orphan / Missing / Abandoned / Underprivileged / Neglected and Destitute Children and Women who are victims of immoral trafficking, between the age of 5 to 18 years. This home provides free food, education, shelter, medical care and other basic needs of life to the inmates, besides education. These children go to a nearby school for education or take it up in the residential school inside the home. The home accommodates nearly 100 totally orphan children and also other poor children who have both or a single parent. The Parents / Guardians are allowed to meet and spend time with the children at the home by the First Saturday of every month during when they get Goodies – Fruits, Biscuits and other stuff for them to express their love and care for them. The Orphan Children miss not having their dear ones and earn for the love and care of the dear ones, especially during this time when their other friends have their loved ones visiting them as they have none coming to meet them. This leads to psychological depression and other problems as well. Mrs. Saraswathi, Deputy Superintendent of this home, has requested that we be able to support for these orphan children during these days. Hence, we are planning to visit this home during this Weekend and extend our support and give them some goodies to pep up their Spirits and contribute in a very small way. We need female volunteers are needed for successfully implementing this project. We kingly request volunteers to come forward for this noble cause..

Visit Date – Saturday, 5th November 2011 @ 10.30 am

Venue:
Government Children’s Home for Girls
#300, Purasawalkam High Road, Kellys,
(Next Building To Abirami Mall)
Chennai – 600 010.
Phone # (044) 2642 1279 / 2642 2644

அடுத்த மாதத்தின் முதல் சனிக்கிழமை முடிஞ்சவங்க கலந்துக்கலாமே! நிலாச்சாரல் சார்பா அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது அன்பளிப்பு கூட தரலாம். என்ன சொல்றீங்க?

இந்தியாவிலருந்து திரும்பி பின்ன வேலைக்குப் போகவே பிடிக்கலை. ஆனா வேற வழி இல்லையே… அதனால என்னோட எதிர்மறை அதிர்வைப் போக்கறதுக்காக ‘இப்படி நடந்தா எப்படி இருக்கும்?’னு ஒரு கற்பனை விளையாட்டை நடத்திக்கிட்டே ரயில்ல எறினேன். இறங்கறதுக்குள்ள அதிர்வு பாஸிடிவா மாறிடுச்சு… ரொம்ப சிம்ப்ள்தான்…

உங்களுக்கு என்ன வேணுமோ அதெல்லாம் நடந்தா எப்படி இருக்கும்கற எண்ணத்தை உருவாக்கறதுதான் இந்த விளையாட்டு… உதாரணமா…

வாழ்க்கை இலகுவா, இனிமையா இருந்தா எப்படி இருக்கும்?
இன்னைக்கு ரயில்ல கூட்டம் இல்லைன்னா எப்படி இருக்கும்?
பிரபாஸை வச்சு படம் எடுக்க முடிஞ்சா எப்படி இருக்கும்?
ஒரு நிரந்தர புன்னகை முகத்தில இருந்தா எப்படி இருக்கும்?
நான் என்ன செஞ்சாலும் வெற்றியானா எப்படி இருக்கும்?

இப்படி ஜாலியா நினைச்சிட்டே இருந்தோம்னா நம்மை அறியாமலே அந்த அதிர்வுல நிறைய நேரம் தங்கிடுவோம். பிரபஞ்சத்தின் மொழி இந்த அதிர்வுதான்…ஸோ… முயற்சி செய்து பாருங்க…

எழுதறதுக்கு நிறைய இருக்கு… ஆனா அடுத்த முறை எழுதவும் ஏதாவது வேணும்ல… அதனால நிறுத்திக்கறேன்… அடுத்த வாரம் பார்க்கலாம்…

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

1 Comment

Comments are closed.