புனரபி ஜனனம் புனரபி மரணம்

சிறந்து விளங்கும் நாகரிகம்
சிதைந்து மண்ணில் புதைந்துவிடும்;
இறந்து ஒடுங்கிய மானுடரின்
என்புத் துகளின் ஊட்டத்தில்

பிறந்து புதிய நாகரிகம்
பீடுடன் இளமை நடைபோடும்;
திறந்த சரிதை ஏடுகளில்
திரும்பத் திரும்ப இதுகாணும்.

காலப்பறவை உடற் கிளையில்
கட்டிய கூட்டைக் கலைத்திடினும்
ஞாலவனத்தில் பல மரங்கள்
ஞாயிறு திங்கள் சுழற்சியிலே

கூடு சமைக்கக் கிளைவிரிக்கும்;
குருவிகள் வாழும்; முட்டையிடும்;
தேடி உணவைக் கொண்டுதரும்;
தெம்பும் சிறகும் முளைத்தவுடன்

குஞ்சுகள் தம்வழி பறந்துசெலும்
—பின்
கூடு சமைக்கும்; முட்டையிடும்;
அஞ்சுதற் கில்லை ஜகத்புருஷன்
ஆக்கிய இயற்கை நியதிஇது

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    இறப்பும் பிறப்பும் என ஏழு குதிரைகள் பூட்டிய காலத்தேர் சுழன்று கொண்டே இருக்கும் என்பது உலகோர் ஓதி வைத்த உயிர்த் தத்துவம். நன்று. – அரிமா இளங்கண்ணன்

Comments are closed.