எஸ்.. எம்…எஸ்!” (4)”

இவனை என்ன செய்ய.

"ஜோக்ஸ் எல்லாம் பிடிச்சிருந்ததா.. என் டேஸ்ட்தான் உனக்கும்னு எனக்குத் தெரியும். அதனாலதான் எனக்குப் பிடிச்ச மெசேஜை மட்டும் உனக்கும் அனுப்பறேன்".

நான் பேசாமல் இருந்தேன்.

"ஹேய் டார்லிங், என்னைப் பார்க்கணும் போல இருக்கா".

"ம்"

"இன்னிக்கே பார்க்கலாமா"

"ம்"
 
"நாலு மணிக்கு ரெடியா இரு. இடம் சொல்றேன். எனக்குப் பிடிச்ச ஸ்கை ப்ளூ ஸாரி.. ஓ.. நீ சுரிதார் போடுவியா.. அப்ப அதே கலர்ல சுரிதார் இருக்கா" இருக்குடா படவா.

"நாலு மணி.. ஓக்கே"

கட்டாகி விட்டது. யாரோ கதவைத் தட்டிய சத்தம். எழுந்து போனேன். கதவைத் திறந்தால் எதிரே புனிதா.
 
"பாயசம் எடுத்துக்கலியே" என்றாள் டம்ளரை நீட்டி.

"இப்ப வேணாம்.. அப்புறம்"
 
வசந்தியின் குரல் கேட்டது.

"அப்புறம் இருக்காது. இன்னிக்கு வழக்கத்தை விட சூப்பரா அமைஞ்சிருக்கு. நானே எடுத்து குடிச்சிருவேன்"
 
பாயசம் ரசிக்கிற மூடில் நான் இல்லை. ஒரு அண்டா பாய்சன் இருந்தால் மெசேஜ் அனுப்புகிற தடியனுக்கு ஊத்திக் கொடுத்து விடுவேன்.

"இன்னிக்கு சினிமா போலாமா" என்றாள் வசந்தி.

"நா..ன் வரலே" என்றேன்.

"ஏன்.."

"வெளியே போகணும். ஒரு முக்கியமான வேலை இருக்கு"

"அதானே பார்த்தேன். இப்பல்லாம் நாம மாசம் ஒரு தடவை பார்க்கிறதே அபூர்வமாயிருச்சு. ரெண்டு தடவையா நீங்க இல்லாம நாங்க மட்டும் வந்துட்டு போனோம்."

புனிதாவும் கேட்டாள்.

"போலாமே"

ம்ம். யோசித்தேன்.

அவன் நினைத்தபடி ‘நான்’ உடனே வந்து அவனைச் சந்தித்து விட்டால்.. என் மேல் இருக்கிற கவர்ச்சி போய் விடும். இவனை இப்படியே விடக் கூடாது. ஒரு தரம் அவனை அலைய விட வேண்டும்.

"சரி. வா.. சினிமா போகலாம்"

புனிதாவுக்கு ஒரே குஷி. தியேட்டரில் பாதி படம் பார்க்கையில் மெசேஜ். ‘ஸாரிடா.. இன்னிக்கு புரொகிராம் கேன்சல்.. அப்புறம் பார்க்கலாம்’ அவனும் என்னைப் போலவே உஷார் பார்ட்டிதான். உடனே வரக் கூடாதென்று மழுப்புகிறான்.

பத்து நிமிடங்களில் இன்னொரு மெசேஜ். ‘நான் இப்ப எங்கே இருக்கேன் தெரியுமா.. சினிமா தியேட்டர்ல.. ப்ச்.. என் பக்கத்துல நீ இல்லியேன்னு வருத்தமா இருக்கு’ அந்த நிமிடம் எனக்கு டெலிபோன்ஸில் வேலை பார்க்கும் ஒரு நண்பரின் நினைவு வந்தது. எப்படியும் அவரைப் பார்த்துப் பேசி இந்த எண்ணின் சொந்தக்காரன் யார் என்று கண்டுபிடித்து விடவேண்டும்.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. mathi

    இதுபோன்ற கேவலமான கற்பனைப்படைப்புகளை எழுதி, தமிழ்க்கலாசாரத்தையே
    பாழ் அடிக்கிறீர்களே ஏன்?
    எப்படி தமிழகம் முன்னேறும்? சற்றே சிந்தியுங்கள். தமிழ்ப் பண்பாடு பாதுகாக்க பாடுபடுங்கள்!

Comments are closed.