அதீதாவுக்கு

1.

சதா கதைத்திருக்கும் உன்
கனகச்சிதச் செவ்வாய்

தீராது நடனமிடும் உன்
தீ விரல்

அபிநயித்துருளும்
உன் அதீத கண்கள்

பின்னி நெளியும் உன்
வெண்மலர்ப் பாதங்கள்
என் வலை விழும் வரை.

2.

பகலிலும் இரவிலும்
வாசல்வந்து
அள்ள நினைக்கையில்
அரூபமாகி
ஈரமும் மணமும் மட்டும்
தந்துபோகிறாய்
நிறமற்ற காற்றாய்

3.

குழந்தைகள்..
பூக்கள்..
குழந்தைகள் பூக்களாலான
நீ..
உன்னாலான
நான்.

4.

என்னுள் சிறகடிக்கிறாய் நீ
நான் பறக்க நினைக்கும்
கணங்களில்.

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author