ஆந்திர மாநில ஊறுகாய் – ஆவக்காய்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்டித் தயிரும், காரசாரமான ஆவக்காய் ஊறுகாயும் விருப்பமான உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த வேனிற்காலத்தில் கிடைக்கும் மாங்காய்களை உபயோகித்து வருடத்திற்கு ஒரு முறை ஊறுகாய்களைத் தயாத்து வைத்துக் கொள்வது அவர்கள் வழக்கம்.

ஆவக்காய் ஊறுகாய் தயாரிப்பது எவ்வாறு என்பதைத் தெரிந்துகொள்வோமா..

தேவையான பொருட்கள் :

பழுக்க வைக்கும் மாங்காய்கள் – 25 
மிளகாய்த்தூள் – 3அரைக்கால்
உப்பு – 3 1/2 அரைக்கால்
பூண்டு – 100 gm (தேவையானால்)
கடுகுத்தூள் – 150 gm 
கறுப்புக் கொத்துக்கடலை – 100 gm
வெந்தயம் – ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி – ஒரு மேசைக்கரண்டி
எள்ளெண்ணெய் 1 1/2 kg

செய்முறை : 

மாங்காய்களை நன்றாகக் கழுவி ஈரமில்லாமல் ஒரு சுத்தமான துணியினால் துடைத்து வைத்துக் கொள்ளவும். மாங்காய்களை கொட்டையுடன் துண்டுகளாக்கிக் கொள்ளவும். உள்ளிருக்கும் மெல்லிய தோலையும் சுத்தமாக நீக்கி விட வேண்டும்.

கருப்புக் கொண்டைக் கடலையை ஒரு மெல்லிய சுத்தமான துணியினால் துடைத்து வைத்துக் கொள்ளவும். உப்பு, மிளகாய்த்தூள், உத்த பூண்டு பற்கள், கடுகுத்தூள், கறுப்புக்கொத்துக்கடலை, வெந்தயம், சிறிது எள்ளெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு, மாங்காய்த்துண்டுகளுடன் நன்றாகக் கலந்துகொண்டு, சுத்தமாகக் கழுவி வெயிலில் உலர வைத்த ஜாடியில் போடவும்.

இரண்டு நாட்கள் கழித்து முழு ஊறுகாயையும் வெளியே எடுத்து விட்டு நன்றாகக் கிளறி மீண்டும் ஜாடியில் போட்டு மூடி வைத்து ஒரு உலர்ந்த கரண்டியில் எடுத்து உபயோகிக்கவும்.”

About The Author