ஆரஞ்சு தோல் டீ

தேவையான பொருட்கள்:

ஒரு ஆரஞ்சுப் பழத்தின் தோல் – பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
தண்ணீர் – 2 முதல் 5 கப்
பால் – 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை – சிறிது
பனங்கற்கண்டு (அ) வெல்லம் – சுவைக்கு

செய்முறை:

தண்ணீரை சுட வைத்து பொடியாக நறுக்கிய ஆரஞ்சுத் தோலை சேர்த்து தழலை மட்டாக வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து அணைத்து விடவும். (அதிகம் கொதிக்க விடக்கூடாது) ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி பாலுடன் பனை வெல்லமோ கற்கண்டோ சேர்த்து பருகலாம்.

****

About The Author