இடிதெய்வத்தின் பரிசு (2)

முதல் துளி நீரிலேயே இடி தெய்வம் தன் முழு சக்தியையும் மீண்டும் பெற்றது. உறுமிய படியே கூண்டின் இரும்புக் கம்பிகளை சுள்ளிகளை உடைப்பதைப் போல எளிமையாக உடைத்தது.

"நன்றி!", என்று உறுமியது இடி தெய்வம். "இந்த பரிசை உங்களின் உதவிக்கு நன்றியாக வைத்துக் கொள்ளுங்கள்."

தன் வாயிலிருந்து ஒரு பலைப் பிடுங்கி தரையில் போட்டது. "இப்போதிலிருந்து உங்கள் பெயர் சுரைக்காய்ப் பெண் சுரைக்காய்ப் பையன். பரிசை முறையாகப் பயன் படுத்துங்கள்", என்று சொல்லிவிட்டு மின்னலாய் வானில் மறைந்து விட்டது.
பிள்ளைகளின் கண் முன்னாலேயே ஒரு சின்ன பச்சைப் புள்ளி அந்தப் பல்லிலிருந்து தோன்றியது. அது கொழுத்த சுரைக்காயானது. அது வளர்ந்து வளர்ந்து பிரமாண்டமானது. பிள்ளைகளை விடப் பெரியதாகி விட்டது. சுரைக்காய் வளர்வது நின்றதும் வானில் மேகம் திரண்டது.

மிகப் பெரிய மழைத் துளிகள் விழுந்தன. விவசாயிகள் வீட்டுக்குத் திரும்பினர்.

"முட்டாள் பிள்ளைகளே!", என்று கத்தினார் அப்பா. "இடி தெய்வம் என்னை தண்டிக்கப் போகிறது. நாம் எல்லோரும் வெள்ளத்தில் சாகப் போகிறோம்."

பிள்ளைகள் காதைச் செவிடாக்கும் இடிக்கு பயந்தார்கள். மேலுலகிலிருந்து மழை கொட்டியது. நீர் தரையில் ஒடியது. இடிக்கு இடையில் உலோகச் சத்தம் கேட்டது. வெள்ளத்திலிருந்து தப்பிக்க ஒரு இரும்புப் படகை கட்டினார் அப்பா. அதிர்ச்சியில் நின்ற பிள்ளைகள் இடி தெய்வத்தின் "பரிசை முறையாகப் பயன் படுத்துங்கள்" எனும் சொற்களை நினைவு படுத்திக் கொண்டார்கள். உடனே, என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து விட்டது.

பிள்ளைகள் சுரைக்காயை உடைத்தனர். உள்ளே இருந்த சதைப் பகுதிகளை முழுக்க சுரண்டி எடுத்து விட்டனர். ஒரு படகைப் போலானது சுரைக்காய். வெள்ளம் நெஞ்சு வரை உயர்ந்தது. சட்டென்று சுரைக்காய் படகிற்குள் குதித்தனர். அப்பாவும் ஏறிக் கொண்டார். வெள்ளம் ஏறிக் கொண்டே இருந்தது. வெள்ளம் இரண்டு குட்டிப் படகுகள் சொர்க்க வாசலுக்குக் கூட்டிப் போயின.

"உதவி!", என்று விவசாயி கதவை இடித்தான்.

மேலுலக அரசர் அமர்க்களத்தைக் கேட்டு என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்டார்.

"சீக்கிரம், வெள்ளம் சொர்க்கத்தையே அழிக்கப் போகிறது. இந்தக் கணத்தில் இந்த நீரையெல்லாம் அப்புறப்படுத்து", என்று இடி தெய்வத்துக்கு ஆணையிட்டார்.

இடி தெய்வம் ஆணையை நிறைவேற்றியது. ஒரே நொடியில் பூமியே வெள்ளத்தில்! அடுத்த நொடியில் எல்லாம் நீரும் மறைந்து போனது.

"ஆ,..!", என்று விவசாயியும் பிள்ளைகளும் அந்தரத்தில் விழுந்தார்கள். இரும்புப் படகு தரையில் விழுந்தது. சுக்கு நூறாக உடைந்தும் போனது. விவசாயியும் இறந்து போனான்.

சுரைக்காய் படகுகள் மிகவும் மென்மையாகத் தரையிறங்கின. பிள்ளைகள் பாதுகாப்பாக வெளியேறினர்.

பூமியில் தாம் இருவரும் மட்டுமே உயிருடன் இருப்பதை பிள்ளைகள் அறிந்தனர். சொர்க்கத்தின் உதவியுடன் சகோதரனும் சகோதரியும் மனித இனத்தை மீண்டும் உருவாக்கினர். எல்லாத் திசைகளிலும் சதைத் துகள்களைப் பறக்க விட்டனர். நிறைய மனிதர்கள் உருவானார்கள். சுரைக்காய் சிறுவனும் சுரைக்காய் சிறுமியும் தெய்வங்களாகி இன்றும் மேலுலகிலிருந்து பூமியைக் காக்கின்றனர்.

About The Author